நடிகர் திலீப்பின் ஜாமின் மனுவை அவசரமாக விசாரிக்க கோர்ட் மறுப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
நடிகர் திலீப்பின் ஜாமின் மனுவை
அவசரமாக விசாரிக்க கோர்ட் மறுப்பு

நடிகை பாவனா பாலியல் தொந்தரவு தொடர்பான வழக்கில், நடிகர் திலீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க, கேரள ஐகோர்ட் மறுத்து விட்டது. 'ஜூலை 20ல் இம்மனு எடுத்துக்கொள்ளப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர், திலீப், ஜாமின், மனு, அவசரமாக, விசாரிக்க, கோர்ட், மறுப்பு


மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த பாவனா, 31, கேரளாவில் கடத்தப்பட்டு, பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
'சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது' என கூறி, அங்கமாலி நீதிமன்றம் திலீப்புக்கு ஜாமின் மறுத்தது.


மீண்டும் மனு :


நேற்று, கேரள ஐகோர்ட்டில், திலீப் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.'எனக்கு எதிராக சாட்சி எதுவும் இல்லை; சாட்சிகளை கலைப்பேன் என கூறுவது அடிப்படை ஆதார மற்றது' என, மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும், 'இந்தவழக்கில் கூட்டு சதி இல்லை' என, முதல்வர் பினராயி விஜயன் கூறிய கருத்தும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
'இம்மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்' என, திலீப்பின் வழக்கறிஞர் பிரதீஷ் சாக்கோ விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த கோர்ட், ஜூலை 20ல் விசாரிப்பதாக கூறியுள்ளது. திலீப்பின் ஜாமினை கடுமையாக எதிர்க்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் காங்., - எம்.எல்.ஏ., அன்வர் சாதத், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,வும், நடிகருமான முகேஷ் ஆகியோரிடம், நேற்று வாக்குமூலம் பதிவு செய்தனர்.திலீப் துாண்டுதலில் பாவனாவை பலாத்காரம் செய்த, 'பல்சர்' சுனில், சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் முகேஷிடம் டிரைவராக பணிபுரிந்தவர்.
எம்.எல்.ஏ., அன்வர் சாதத், நடிகர் திலீப்பின் நெருங்கிய நண்பர். பாவனா கடத்தப்பட்ட அன்றும், அதற்கு முன்னும், திலீப்புடன், அன்வர் சாதத்

Advertisement

அடிக்கடி போனில் பேசியது தெரிந்துள்ளது. இதனால், எம்.எல்.ஏ.,க்கள் இருவரிடமும் திருவனந்தபுரத்தில் வாக்குமூலம் பெறப்பட்டது.

'யூ டியூப்' அலறல் :


இந்நிலையில், பாவனாவை மானபங்கப்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோ, வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், அங்கிருந்து, 'யூ டியூப்பில்' வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது; இதை தடுக்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appu - Madurai,இந்தியா
18-ஜூலை-201719:02:16 IST Report Abuse

Appuஇப்ப எல்லாம் சட்டத்தின் ஓட்டைகளை அடிக்கடி பல பிரபலங்கள் மற்றும் அரசியல்வியாதிகள் பயன்படுத்தி தப்பிக்க முயற்சிப்பது என்னவோ அடிக்கடி நிகழ்கிறது.. இன்னும் இறுக்கமான சட்டம் தேவை...வரிகள் மூலம் மக்களை இறுக்க தெரிந்த அரசிற்கு சட்டத்தை இறுக்கி குற்றவாளிகள் தப்ப பயன்படுத்தும் கால தாமதம்,, இழுவைகள்,,வாய்த்துக்கு மேல் வாய்தா,,சில வார்த்தை கோர்வைகளை சமர்ப்பித்து ஜாமீன் முறையிடுவது போன்றவற்றிற்கு தடாலடி சட்டம் போட கஷ்டமா இல்லை தன் வினையே தன்னை சுடும் என்ற பயமா?

Rate this:
M.Guna Sekaran - Madurai,இந்தியா
18-ஜூலை-201718:02:49 IST Report Abuse

M.Guna Sekaranஅப்போ பாலியல் தொந்தரவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உடந்தையா இருப்பாரோ ? இந்தியாவில் கேரளா தான் படித்த மாநிலம் என்றால் பாலியல் தொந்தரவுக்கும் முதலிடமா ............... கேரளா .............

Rate this:
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
18-ஜூலை-201714:58:04 IST Report Abuse

Vasanth Saminathanரியல் எஸ்டேட்டில் பினாமியாக இருந்ததில் பின்னணியில் சம்பவம் நிகழ்ந்ததென்றால் பாவனா, மஞ்சு வாரியர் மீதும் வருமான வரி ஏய்ப்பு, பினாமி சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும்.

Rate this:
christ - chennai,இந்தியா
18-ஜூலை-201711:42:21 IST Report Abuse

christபெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தும் நாதாரிகளை தூக்கு மேடையில் ஏற்றுங்கள். இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் .

Rate this:
18-ஜூலை-201711:21:18 IST Report Abuse

ARUN.POINT.BLANKpose kudukaraan paaru...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஜூலை-201708:24:23 IST Report Abuse

Srinivasan Kannaiyaபாவனா மீது திலீப்புக்கு ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி...ஒரு பொம்பள கிட்ட போய் கீழ்த்தரமாக நடக்கிறது சரியே இல்லை...

Rate this:
Shanu - Mumbai,இந்தியா
18-ஜூலை-201708:24:06 IST Report Abuse

Shanuமுதல்வர் பினராயி விஜயன் முன்பு கூறிய கருத்தான "'இந்தவழக்கில் கூட்டு சதி இல்லை'" , இதை முதல்வர் வாபஸ் பெற வேண்டும்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-ஜூலை-201704:12:37 IST Report Abuse

Kasimani Baskaranகம்யூனுனிசமும், வஹாபியிஸமும் கடவுளின் நாட்டை சின்னாபின்னமாக்க அதிக நாள் ஆகாது போல தெரிகிறது... இன்னொரு மேற்கு வங்கம் தென்னிந்தியாவில் உருவாகிக்கொண்டு இருக்கிறது... அச்சன்கள் விழித்துக்கொள்ளவில்லை என்றால் நிரந்தர தூக்கம்தான்...

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
18-ஜூலை-201707:04:12 IST Report Abuse

தங்கை ராஜாஎங்கு என்ன உருவாகும் என்பது உருவாக்குபவர்களான உங்கள் அமைப்பினருக்குத் தான் தெரியும். எப்படித்தான் கொழுத்திப் போட்டாலும் தமிழகம், கேரளத்தில் இருப்பவர்கள் புத்திசாலிகள் மற்றும் மனிதாபிமானமிக்கவர்கள். நிதானமாக நடந்து கொள்வார்கள்....

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-ஜூலை-201709:58:59 IST Report Abuse

Kasimani Baskaran"உங்கள் அமைப்பினருக்குத் தான் தெரியும்" - அது எப்படி முதல்வர் நீதிபதியாகி விசாரிக்காமல் தீர்ப்பு சொல்லுகிறார்?...

Rate this:
அரபி அடிமை - Chennai,இந்தியா
18-ஜூலை-201700:44:55 IST Report Abuse

அரபி அடிமைமேலும், 'இந்தவழக்கில் கூட்டு சதி இல்லை' என, முதல்வர் பினராயி விஜயன் கூறிய கருத்தும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இவர்கள்தான் கம்யூனிஸ்ட்ஆ... கருமம்.. முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இந்த புறம்போக்கிற்கு சப்பை கட்டு கட்டுகிறான்.. கேவலம்.. கேரளத்து சகோதரிகள் இனி இதுபோன்ற பிரல்லினத்தவனிடம் இருந்து எச்சரிக்கயாய் இருக்கவும்

Rate this:
18-ஜூலை-201705:14:36 IST Report Abuse

BeuracratIvar muthal amaichar thaan athunala thaan police Alungu katchi mla visarki dhiyriam iruku....

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
18-ஜூலை-201707:07:21 IST Report Abuse

தங்கை ராஜாஎதையும் மூடி மறைக்காமல் விசாரணை நேர்மையாக நடக்கிறதே.....இதை பிஜேபி ஆளும் மாநிலங்களில் நினைத்து பார்க்க முடியுமா..........

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement