300 வருமான வரி கமிஷனர்கள் நாடு முழுவதும் இடமாற்றம்| Dinamalar

300 வருமான வரி கமிஷனர்கள் நாடு முழுவதும் இடமாற்றம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: நாடு முழுவதும், 300க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சி.பி.டி.டி., எனப்படும், மத்திய நேரடி வரிகள் வாரியம், சமீபத்தில், இரண்டு முறை, வருமான வரித்துறையை சேர்ந்த கமிஷனர்களை, நாடு முழுவதும் இடமாற்றம் செய்துள்ளது. முதல் முறை, வெளியான இடமாற்ற பட்டியலில், 80 பேரும், இரண்டாம் முறை வெளியான இடமாற்ற பட்டியலில், 245 பேரும் இடம் பெற்றிருந்தனர். முன்னதாக, மே, 31ம் தேதி, நாடு முழுவதும், வருமான வரித்துறையை சேர்ந்த, 50 தலைமை கமிஷனர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளில், வருமான வரித்துறையில், நிகழ்ந்துள்ள மிகப்பெரும் மாற்றமாக, இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.
இதுகுறித்து, வருமான வரித்துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வருமான வரித்துறையில், பெரியளவில் இடமாற்றங்கள் நிகழ்வது அபூர்வம். சமீபத்தில், ஒரே சமயத்தில், 245 கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக பட்டியல் வெளியானது. இந்தளவுக்கு, கமிஷனர்கள் மாற்றப்படுவது, இதுவே முதல்முறை' என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஜூலை-201714:29:24 IST Report Abuse
Pasupathi Subbian வருமானம் அதிகமாகி இருக்குமோ
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
18-ஜூலை-201712:37:44 IST Report Abuse
CHANDRA GUPTHAN வருமான வரி துறை கமிஷனர்கள் வருமான வாரிய (அள்ளிய) துறை கமிஷனர்கள் ஆனதால் பந்தாடப்பட்டுள்ளனர். புதிய இடம் புதிய மக்கள் கொஞ்சம் மாதங்கள் பிடிக்கும். அப்புறம் திரும்பவும் பந்தாட படவேண்டும் . அப்போது தான் லஞ்சம் தவிர்க்க முடியும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.