'சிறை விதிகளின்படியே சஞ்சய் தத் விடுதலை'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'சிறை விதிகளின்படியே சஞ்சய் தத் விடுதலை'

Added : ஜூலை 17, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மும்பை: 'ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், சிறை விதிகளின் படியே, எட்டு மாதங்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்' என, மஹாராஷ்டிர மாநில அரசு விளக்கமளித்து உள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான ஒரு வழக்கில், பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு, மும்பை கோர்ட், ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது; மேல்முறையீட்டில் இது, ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

மீண்டும் விசாரணை : புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், 120 நாட்கள், பரோலில் இருந்தார். தண்டனை முடிய, எட்டு மாதங்கள் இருந்த நிலையில், நன்னடத்தை அடிப்படையில், முன்கூட்டியே, 2016, பிப்ரவரியில் விடுதலை செய்யப்பட்டார். இதை எதிர்த்து, புனேயைச் சேர்ந்த பிரதீப் பாலேகர் என்பவர், மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சஞ்சய் தத்துக்கு, விதிகளை மீறி சலுகை காட்டப்பட்டதாக, அதில் குறிப்பிட்டு இருந்தார்.இதை தொடர்ந்து, மஹாராஷ்டிர அரசுக்கு, மும்பை ஐகோர்ட், சரமாரி கேள்விகள் கேட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மஹாராஷ்டிர அரசு சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கூறப்பட்டுஉள்ளதாவது: சஞ்சய் தத் சிறையில் இருந்தபோது, ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்; பயிற்சி, கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றார். சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட பணிகளை செவ்வனே செய்தார்.

நன்னடத்தை : இதனால், அவரது நன்னடத்தையை கருத்தில் வைத்து, சிறை விதிகளின் படி, அவர் எட்டு மாதங்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
18-ஜூலை-201723:03:41 IST Report Abuse
adalarasan ஆனால் ஆவர் பாதிநாட்கள் பேரொலில் வெளியில் இருந்தார் என்பதும் உண்மைதான்?
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
18-ஜூலை-201712:44:26 IST Report Abuse
CHANDRA GUPTHAN பல ஆயிரக்கணக்கானவர்கள் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் வாடுவதேன். தீவிரவாதிகள், பயங்கரவாதிகளைத்தவிர மற்றவர்களை விடுதலை செய்ய வேண்டியது தானே. இவனிடம் லைசென்ஸ் இல்லாத AK 47 இருந்ததே அப்ப எவன் குற்றவாளியே நீதிபதிகள் வாயில் என்ன வைத்துள்ளனர் . பாட்டரி வாங்கி கொடுத்தவனுக்கு 25 வருஷம் துப்பாக்கி வெச்சுருக்கிறவனுக்கு 5 வருஷம் நல்ல நீதி போங்கடா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை