தொலைநோக்கு திட்டம் - 2023 அ.தி.மு.க., தொலைத்து விட்டது ஸ்டாலின் குற்றச்சாட்டு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தொலைநோக்கு திட்டம் - 2023 அ.தி.மு.க.,
தொலைத்து விட்டது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை : 'தொலைநோக்கு திட்டம் - 2023ஐ, அ.தி.மு.க., தொலைத்து விட்டது; கைவிட்டு விட்டது' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டிஉள்ளார்.

தொலைநோக்கு திட்டம் 2023, Visionary program 2023, அ.தி.மு.க.,ADMK, ஸ்டாலின், Stalin,குற்றச்சாட்டு, Accusation, சென்னை , Chennai, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் , DMK Executive Chairman Stalin,தமிழகம், Tamilnadu,தொழில் வளர்ச்சி, Industry Development, முதல்வர் பழனிசாமி , Chief Minister Palanisamy, சட்டசபை, Assembly, கர்நாடகா, Karnataka, ஆந்திரா, Andhra Pradesh,

அவரது அறிக்கை:


தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, அ.தி.மு.க., ஆட்சியில், மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு வந்து விட்டது. தொழில் வர்த்தக சபைகளும், உலக வங்கி அறிக்கைகளும், தமிழக தொழில் வளர்ச்சியின் வீழ்ச்சியை படம்

பிடித்துக் காட்டினாலும், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

ஞானோதயம் பிறக்கவில்லை.


நிடி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி, 'தொழில் துவங்குவதற்கு ஏற்ற சூழல் இல்லாத மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் கடைசி இடத்தில் இருக்கிறது' என, மாநில தலைமைச் செயலர்கள் கூட்டத்தில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதைக் கேட்ட பின், இந்த அரசுக்கு ஞானோதயம் பிறக்கவில்லை.
சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, இது குறித்து பேசிய போதும், தொழில் துறை அமைச்சர், மின் துறை அமைச்சர் போன்றவர்கள், தமிழகதொழில் வளர்ச்சியின் பரிதாப நிலையை உணரவில்லை. இந்த அரசு தடபுடலாக அறிவித்த, தொலைநோக்கு திட்டம்- - 2023ஐ தொலைத்து விட்டது; கைவிட்டு விட்டது.

Advertisement

பின்தங்கி இருப்பது வேதனைகர்நாடகா, ஆந்திராவை விட அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழகம் பின்தங்கி இருப்பது, மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழகம் என்ற மதிப்பு மிக்க நாணயம், இன்றைக்கு ஒருபுறம் வேலை வாய்ப்பு இல்லாமலும், மற்றொரு புறம் பொருளாதார வளர்ச்சி இல்லாமலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-ஜூலை-201720:31:13 IST Report Abuse

Pugazh Vஸ்டாலின் பற்றி செய்தி வந்தால் அங்கே வந்து ஸ்டாலினை திட்டுவதாக நினைத்துக் கொண்டு அதிமுகவுக்கு லாவணி எழுதுவார்கள். அதிமுக பத்தி எய்தி வந்தா அங்கே போய் அதிமுக வை திட்ட துணிச்சலோ த்ராணியோ கிடையாதென்பதால் அங்கேயும் திமுக வை திட்டுவார்கள். அவங்களுக்கும் வேற பொழப்பில்லே உங்களுக்கும் வேற பொழப்பில்லாம ரெண்டு சாப்பிடும் இம்சை. அடுத்த தேர்தலில் ரெட்டை இலையில் எவன் நின்னாலும் அவனுக்கு குத்தப் போறான் தமிழன். அதுக்குள்ளே கொஞ்ச நாள் அரசியல் பேசறதா ஏதானும் எழுதிக்கட்டும்

Rate this:
krishna - cbe,இந்தியா
18-ஜூலை-201718:00:12 IST Report Abuse

krishnaஅதிமுக கட்சியே தொலைந்து விட்டது.

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
18-ஜூலை-201717:02:58 IST Report Abuse

g.s,rajanஇப்போது திமுகவும் தொலைந்து விட்டது அதிமுகவும் தொலைந்து விட்டது ஜி.எஸ்.ராஜன் சென்னை

Rate this:
A shanmugam - VELLORE,இந்தியா
18-ஜூலை-201713:59:04 IST Report Abuse

A shanmugamதீ மூ கா ஆட்சி காலத்தில் தொலை நோக்கு திட்டம் என்று எதாவது வகுக்கப்பட்டதா? லஞ்சத்தை ஈட்டும் திட்டமாகத்தான் ஆறு முறை உங்க தகப்பனார் ஆட்சி காலத்தில் நிகழ்ந்து என்று தமிழ் நாட்டில் எவரேனும் மறுக்க முடியும்மா?

Rate this:
Balaji - Khaithan,குவைத்
18-ஜூலை-201712:58:31 IST Report Abuse

Balaji////'தொழில் துவங்குவதற்கு ஏற்ற சூழல் இல்லாத மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் கடைசி இடத்தில் இருக்கிறது'///// இந்த வாக்கியம் சரிதானா என்று யோசித்தால் அவர் சொல்லியிருப்பது தவறாகவே பொருள் வருகிறது........ சூழல் இல்லாத மாநிலம் என்ற பட்டியலில் உண்மையில் கடைசியில் தான் இருக்க வேண்டும் முதலில் இருந்தால் தான் எதிர்மறை பொருள் வரும்...... தமிழகம் இந்த பட்டியலில் கடைசியில் இருக்க வாய்ப்பே இல்லை.... இவர் சொன்ன விதம் தவறாக இருக்கிறது.. பொறுப்பாக பேசுவது போல தனது அறியாமையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.. ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்துக்கொண்டு பேசுங்கள் செயல்..........

Rate this:
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
18-ஜூலை-201712:27:06 IST Report Abuse

CHANDRA GUPTHANஉங்கப்பன் எப்போ ஆட்சியை பிடிச்சானோ அப்பவே தமிழகத்து அழிவு ஆரம்பமாகிவிட்டது. மத ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் மட்டுமல்ல எல்லா வகையிலும் அழிவுக்கு வழிவகுத்தது உங்கப்பன். இல்லையென்று உன்னால சொல்லமுடியுமா சுடலை. அதில் உனக்கும் உன் குடும்பத்துக்கும் கட்சிக்காரர்களுக்கு தொடர்பே இல்லைன்னு உன்னால சொல்லமுடியுமா சுடலை. இலவு காத்த கிளி நீ.

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
18-ஜூலை-201715:21:09 IST Report Abuse

Karuthukirukkanஎது தமிழகம் சீரழிஞ்சிருச்சா ?? இந்தியாவில் தொழிற்துறை , சமூக ஒற்றுமை , மொழி பாதுகாப்பு , கல்வி துறை , பெண்கள் பாதுகாப்பு , மத கலவரம் இல்லாமை என்று எல்லாவற்றிலும் முன்னணியில் இருக்கும் தமிழகமே சீரழிஞ்சிருச்சுனா .. அப்போ மற்ற மாநிலம் எல்லாம் என்ன நிலையில் இருக்கு ???...

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
18-ஜூலை-201712:10:46 IST Report Abuse

Karuthukirukkanதிராவிட ஆட்சியில் தமிழகம் மிக பெரும் வளர்ச்சியை அடைந்து தொழில் துறையில் இந்தியாவிலேயே முதல் இடத்தில உள்ளது .. இந்தியாவின் தொழிற்சாலைகளில் மொத்தம் 16 சதவீதம் தமிழகத்திலேயே உள்ளது .. அது கருணாநிதியாக இருந்தாலும் ஜெயலலிதா ஆக இருந்தாலும் சரி தொழிற்துறை நன்றாகவே வளர்ந்துள்ளது .. ஆனால் இது 2013 வரை மட்டுமே நடந்தது . ஜெயலலிதா என்று சிறை சென்றாரோ அன்று முதல் இன்று அவர் இறப்பின் பின்னாடி தமிழகத்தின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது .. சிறை சென்ற பிறகு ஜெயலலிதா உடல் நிலையும் சரி இல்லாமல் இருந்தார் .. 2016 தேர்தல் பிரச்சாரமே மிகவும் வருத்திக்கொண்டு தான் செய்தார் .. தமிழகத்தின் துரதிரிஷ்டம் 2016 அதிமுக வெற்றி .. திமுக வென்று இருந்தால் ஒரு நிலையான ஆட்சியாவது கிடைச்சிருக்கும்.. இதை தான் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் .. அதை புரிந்து கொள்ளாம சுடலை விடலை என்று காழ்புணர்ச்சியில் கொந்தளிக்கும் பக்தாளை என்ன சொல்வது.. நீங்க தான் போட்டிலேயே இல்லையே அப்புறம் ஏன் வண்டீல ஏறுறீங்க ??

Rate this:
sundaram - Kuwait,குவைத்
18-ஜூலை-201710:58:04 IST Report Abuse

sundaram2023 தொலை நோக்கு திட்டம் அறிமுகப்படுத்திய போதே அதை தீவிரமாக எதிர்த்தவர்களுக்கு அந்த திட்டம் செயல்படாதது சந்தோஷத்தைத்தானே கொடுத்திருக்கணும்? வருத்தப்படுவானேன்.

Rate this:
Nagarajan Thamotharan - Panagudi, Tirunelveli,இந்தியா
18-ஜூலை-201710:23:39 IST Report Abuse

Nagarajan Thamotharanதமிழ் நாட்டை மொத்தமும் குடும்பத்திற்கு பட்டா போடும் திட்டம் எதுவும் ..........வாரிசு தலைவர் எந்த திட்டத்தை பற்றி பேசுகிறார் என்பதை விவரமாக தெரிவிக்க வேண்டும் .

Rate this:
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
18-ஜூலை-201709:43:59 IST Report Abuse

Thiagarajan Kodandaramanசெயல் படாத ஆட்சி என்று தினமும் சொல்லி புலம்பும் உமக்கு ஒன்று தகவல் சொல்கிறேன். செயல் படாத ஒருவருக்கு அரசாங்க சம்பளமும் இந்த ஆட்சியில் தான் தந்து கொண்டு இருக்கிறார்கள் இப்ப சொல்லுங்க இந்த ஆட்சி செயல் படுதா இல்லையா

Rate this:
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
18-ஜூலை-201713:06:53 IST Report Abuse

Ramaswamy Sundaramஅதையும் கடைசி வரைக்கும்... தரணும் என்று நேத்துதான் இந்த யோக்ய சிகாமணி தீர்மானம் கொண்டுவந்து நிறைவேத்தினரு...அப்பா மட்டும் ஆதிமுகா ஆட்சி இனிச்சதோ? யாரு இருந்தாலும் யாரு செத்தாலும் சுருட்டுறதே குறி இந்த நாதரிப்பயலுவளுக்கு...

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement