பதிவு செய்த நாள் :
 துணை ஜனாதிபதி வேட்பாளர், Vice Presidential candidate,  வெங்கையா,Venkiah,  ராஜ்யசபா, Rajya Sabha,லோக்சபா தேர்தல் ,Lok Sabha election,  துணை ஜனாதிபதி தேர்தல்,  Vice Presidential election,பா.ஜ., BJP, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,President Pranab Mukherjee, ராம்நாத் கோவிந்த்,Ramnath Govind, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி,  Vice President Hamid Ansari,

ராஜ்யசபாவை பிரச்னை இல்லாமல் முடங்காமல் நடத்த வேண்டும்; எதிர்க்கட்சிகளை சமாளிக்க வேண்டும். 2019 லோக்சபா தேர்தலில் தென் மாநிலங்களில் கட்சிக்கு அதிகமான ஓட்டுகள் கிடைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு அம்சங்களை மனதில் வைத்து ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் வகையில் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக வெங்கையா நாயுடுவை 68, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு நிறுத்தி உள்ளது. இதனால் காந்தி பேரனுக்கும், இவருக்கும் இடையே போட்டி நிலவுவது உறுதியாகி உள்ளது.

 துணை ஜனாதிபதி வேட்பாளர், Vice Presidential candidate,  வெங்கையா,Venkiah,  ராஜ்யசபா, Rajya Sabha,லோக்சபா தேர்தல் ,Lok Sabha election,  துணை ஜனாதிபதி தேர்தல்,  Vice Presidential election,பா.ஜ., BJP, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,President Pranab Mukherjee, ராம்நாத் கோவிந்த்,Ramnath Govind, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி,  Vice President Hamid Ansari,


ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று நடந்தது. இதில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்
உள்ளது.
இந்நிலையில் ராஜ்யசபா தலைவராக உள்ள துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆக., 10ல் முடிவுக்கு வருகிறது. புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆக., 5ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் காங்., உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளின் சார்பில் காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, 72, வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
அதனால் தங்கள் கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.,வின் பார்லி., குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நிதின் கட்கரி, அனந்த குமார், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ள வெங்கையா நாயுடுவை வேட்பாளராக நிறுத்துவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு பின் இந்த தகவலை அமித் ஷா அறிவித்தார். ''பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு அறிமுகம் ஏதும் தேவையில்லை. கட்சியின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர்,'' என அமித் ஷா கூறினார்.
ஆந்திரா மற்றும் மத்திய அரசில் அவர் வகித்த பதவிகள், கட்சியில் அவரது பங்களிப்பை, அமித் ஷா பட்டியலிட்டார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசிலும் வெங்கையா நாயுடு மத்திய அமைச்சராக இருந்தார் என்றும் தெரிவித்தார். முன்னதாக துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சியின் மூத்த அமைச்சர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களான கிருஷ்ணகோபால் சர்மா, சுரேஷ் ஜோஷி ஆகியோரை சந்தித்து அவர்களின் கருத்தை அமித் ஷா கேட்டறிந்தார்.
தமிழக கவர்னர்வித்யாசாகர் ராவ், மதுபானி எம்.பி.,யான, ஹுகும்தேவ் நாராயண் யாதவ், மணிப்பூர் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா, கேரள கவர்னர் சதாசிவம் ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் வெங்கையா நாயுடு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்டது என்?


துணை ஜனாதிபதி பதவிக்கு மற்ற சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும் முதலில் இருந்தே வெங்கையா நாயுடுவின் பெயர் தான் முன்னிலையில் இருந்தது. மிகவும் நகைச்சுவையாகவும், எதுகை மோனையுடனும் அவர் பேசும் பேச்சு மற்றும் மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி வந்தது போன்றவை அவருக்கு சாதகமாக அமைந்தன.
ஜனாதிபதி தேர்தலில் வடமாநிலமான உ.பி.,யைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டு உள்ளதால் துணை ஜனாதிபதி தேர்தலில் தென் மாநிலத்தைச் சேர்ந்தவரை நிறுத்த வேண்டும் என மோடியும், அமித் ஷாவும் விரும்பினர். ஆந்திராவின் நெல்லுார் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கையா, இயற்கையான தேர்வாக அமைந்தார்.
தென் மாநிலத்தைச் சேர்ந்தவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளதன் மூலம் அடுத்த லோக்சபா தேர்தலில் தென் மாநிலங்களில் கட்சியை பலப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என பா.ஜ., தலைமை நினைத்துள்ளது. ராஜ்யசபாவில் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் எதிர்க்கட்சிகளை சமாளிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ராஜ்யசபா தலைவராக உள்ள துணை ஜனாதிபதிக்கு உள்ளது.

தொடர்ந்து நான்கு முறை ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கையாவை தான் இதற்கு சரியான தேர்வாக கட்சி தலைமை கருதியது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மற்றும் கட்சியின் மாணவர் அமைப்பான

Advertisement

ஏ.பி.வி.பி., ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவமும், இரு முறை கட்சியின் தேசிய தலைவராகவும் பணியாற்றிய அனுபவமும் வெங்கையாவுக்கு உண்டு. இந்த அனைத்தும் ஒருங்கே அமைந்ததால் அவரை கட்சி ஒருமனதாக தேர்ந்தெடுத்து உள்ளது.
* முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவு அளிக்கும்படி கோரினார். பன்னீரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தார்.

வெற்றி வாய்ப்பு


லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஓட்டளித்து துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க உள்ளனர். அதன்படி மொத்தமுள்ள 790 எம்.பி.,க்களில் 550க்கும் மேற்பட்டோரின் ஆதரவு தே.ஜ., கூட்டணிக்கு உள்ளது. அதனால் துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி பெறுவது ஏற்கனவே உறுதியாகி உள்ளது.
வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்று வெங்கையா நாயுடு வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். அதே போல எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கோபாலகிருஷ்ண காந்தியும் இன்று மனு தாக்கல் செய்கிறார். ஆக., 5ல் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்கிறது. அன்றைய தினமே தேர்தல் முடிவு வெளியிடப்படும்.

வெங்கையா பயோடேட்டா


பெயர் : முப்பாவரபு வெங்கையா நாயுடு
தந்தை : ரங்கையா நாயுடு
மனைவி : உஷா
பிறந்த நாள் : 1.7.1949
பிறந்த ஊர் : சவடாபாலம், நெல்லுார் மாவட்டம், ஆந்திரா
குழந்தைகள் : ஒரு மகன், ஒரு மகள்
கல்வித்தகுதி : பி.ஏ., பி.எல்.,
தொழில் : விவசாயம் / அரசியல்

வகித்த பதவிகள்


1971 : நெல்லுார், வி.ஆர்.கல்லுாரி மாணவர் சங்க தலைவர்
1977 : ஆந்திரா, ஜனதா கட்சி இளைஞர் பிரிவு தலைவர்
1978 - 83: ஆந்திரா சட்டசபை உதயகிரி தொகுதி உறுப்பினர்
1988 - 93: ஆந்திர மாநில பா.ஜ., தலைவர்
1993 - 2000: பா.ஜ., அகில இந்திய பொதுச் செயலர்
1998 : ராஜ்யசபா எம்.பி.,
2000 : மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
2002 - 04: பா.ஜ., தேசிய தலைவர்
2006 : பா.ஜ., பார்லிமென்ட் குழு உறுப்பினர்
2016 : மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர்

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
18-ஜூலை-201721:07:21 IST Report Abuse

Indianதமிழக கட்சி உடைப்பு பணியை கன கச்சிதமாக செய்ததற்காக இவருக்கு ஜனாதிபதி பதவியல்லவா கொடுத்திருக்க வேண்டும்

Rate this:
jagadeesan - Hosur,இந்தியா
18-ஜூலை-201721:03:02 IST Report Abuse

jagadeesanவெங்கய்ய நாயிடு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.சரியான தேர்வு.நிதானம் எல்லா அரசியல் வாதிகளுக்கு மத்தில் இவரை போன்ற அப்பழுக்கு இல்ல ஒருவரை பிஜேபி தேர்ந்து எடுத்ததற்கு என் நன்றிகள்.

Rate this:
Sandru - Chennai,இந்தியா
18-ஜூலை-201715:50:24 IST Report Abuse

Sandru" மூன்று கில்லாடிகள்" பட விளம்பர போஸ்டர் போல இருக்கு.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-ஜூலை-201714:10:25 IST Report Abuse

இந்தியன் kumarநல்ல பேச்சாளர் , திறமையாக நடத்துவார் , ஆனால் கட்சிக்கு மாபெரும் இழப்பு

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-ஜூலை-201714:08:33 IST Report Abuse

இந்தியன் kumarஇந்தியாவின் இரண்டாவது குடிமகனாக வருவதற்கும் ஒரு மச்சம் வேண்டும் , அடுத்த ஜனாதிபதியாகவும் வாழ்த்துக்கள்

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
18-ஜூலை-201715:05:14 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranபிஜேபி இவருக்கு துரோகம் செய்துவிட்டது .அம்மா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அதை மேற்பார்வையிட மத்திய பிஜேபி அரசு அனுப்பிய ஐந்து மூத்த அமைச்சர்களில் , கடைசி வரை உடனிருந்து , அம்மாவின் இறுதி யாத்திரை சிறப்பாக நடக்க வழி வகை செய்த வெங்காயவுக்கு ஜனாதிபதி ' வேட்பாளராக நிற்கவைக்காமல் 'துணை ஜனாதிபதி' வேட்பாளார்க அறிவித்தது மனதிற்கு வருத்தமாக உள்ளது....

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
18-ஜூலை-201713:11:02 IST Report Abuse

ganapati sbமுதலில் பதவியில் இருக்கும் பொது தென்னிந்திய தமிழரான அப்துல் கலாமுக்கு ஜனாதிபதி வாய்ப்பளித்து வடஇந்திய செகவத்திற்கு துணை ஜனாதிபதி வாய்ப்பளித்த பாஜக இப்போது பதவியில் இருக்கும் பொது வடஇந்திய ராம்நாத்திற்கு ஜனாதிபதி வாய்ப்பும் தென்னிந்திய வெங்கையாவுக்கு துணை ஜனாதிபதி வாய்ப்பும் வழங்கி உள்ளது நல்லது.தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் என மும்மொழிகளிலும் சிறந்த பேச்சாற்றல் அனைத்து தென்னிந்திய மொழிகளை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்ற தற்போதைய மோடி கால அமித்சா போல வாஜ்பாய் காலத்தில் கட்சி தலைவராக இருந்த துடிப்பான செயல் திறன் வாய்ந்த மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய வெங்கையா நாயுடு ராஜ்யசபாவையும் வழிநடத்தும் துணை ஜனாதிபதி பதவிக்கு மிக சிறந்த தேர்வு.ஜனாதிபதி பதவி போல் MLA க்கள் வாக்குகள் இல்லாமல் MP க்கள் வாக்குகள் மட்டும் கொண்டு தேர்ந்தெடுக்க படும் துணை ஜனாதிபதி பதவி ஏற்கனவே பாஜக தனித்தே சொந்த பலத்திலேயே வெற்றி பெரும் நிலையில் உள்ளது. தோற்பதற்கென்றே வாரிசு மீரா குமாரை நிறுத்தியது போல வாரிசு ராஜ்மோகனை நிறுத்தியுள்ளது வாரிசு அரசியலை ஜனாதிபதவி தேர்தலிலும் செய்யும் நேரு இந்திரா சஞ்சய் ராஜிவ் சோனியா ராகுல் பிரியங்கா வத்ரா என வாரிசு கட்சி தலைமை பண்பாடு காக்கும் காங்கிரஸ்.

Rate this:
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
18-ஜூலை-201712:53:54 IST Report Abuse

Ramaswamy Sundaramதபார்ரா வெங்காய நாய்டுக்கு வந்த யோகத்தை....இவரு பல ஆண்டுகளாக மத்திய சர்க்கார் சம்பளம் வாங்கினது பத்தாதாமா? இனி உதவி ஜனாதிபதி அப்படின்னு பெற வச்சுக்கிட்டு பாஜனதாவுக்கு ஊரு ஊரா போயி ஜால்ரா பஜனை செய்யப்போறாரு.... அதுக்கு தீண்ட சம்பளம்....நடத்துங்க தாடிஜி

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
18-ஜூலை-201714:06:32 IST Report Abuse

Agni Shivaத...பார்ரா இந்த ஆளுக்கு வந்த எரிச்சலை....

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஜூலை-201712:46:44 IST Report Abuse

K.Sugavanamஅரசியலில் இருந்து விலகி நாட்டு நலனில் முழு திறமையையும் காண்பிக்க ஒரு வாய்ப்பு.. சும்மா "பைட் ஜாயியே" "பைட் ஜாயியே" என சொல்லிக் கொண்டே இல்லாமல் கறாராக நடந்து கொள்ள வேண்டும்..ஜோக்கடித்தே சமாளித்துவிடுவார் என்பது தெரிந்ததே..

Rate this:
Balaji - Khaithan,குவைத்
18-ஜூலை-201711:34:04 IST Report Abuse

Balajiதிரு.அத்வானி அவர்களின் நிலைமை தான் மிகவும் வருத்தத்திற்குரியது.. அவரை எதனால் இந்த துணை ஜனாதிபதி பதவிக்கு (அவர் மீது வழக்கு இருந்தாலும்) கூட தேர்வு செய்யவில்லை என்பது தெரியவில்லை. நம்ப வைத்து நசுக்கிவிட்டார்கள் என்பது மட்டும் தெரிகிறது......

Rate this:
A shanmugam - VELLORE,இந்தியா
18-ஜூலை-201711:23:33 IST Report Abuse

A shanmugamபிஜேபி தனது வானளாவிய அதிகாரத்தோரணையால் "ஒரு ரப்பர் ஸ்டாம்ப்"யை உருப்படியாய் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து விட்டார்கள். இப்போது தேர்ந்தெடுத்த ரப்பர் ஸ்டம்புக்கு ஒரு "ஸ்டாம்ப் பேட்" வேண்டும் அல்லவா அதுதான் வெங்கய்ய நாய்டு என்ற "ஸ்டாம்ப் பேட்" சூப்பர் காம்பினேஷன். என்ன பொருத்தம் ஆகா என்ன பொருத்தம் ஆகா என்ன பொருத்தம்..........மோடிஜிக்கு இனி இந்தியாவே அவர் "கை அடக்கம்தான்|" போங்கோ?

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
18-ஜூலை-201714:11:50 IST Report Abuse

Agni Shivaஆகா என்ன கருத்து ஆகா என்ன கருத்து.. கருத்து பேழை. இது வரை இந்தியாவின் இருந்த ஜனாதிபதிகள்- பிரதிபா பாட்டியை- போன்று சூராதி சூரனை போலவும் சூப்பர் ஸ்டார் போலவும் இருந்தார்களாம்..தற்போது மோடி ஆட்சியில் இந்த பதவி ரப்பர் ஸ்டாம்ப் ஆகி விட்டதாம்..ஆகா என்ன கருத்து ஆகா என்ன கருத்து....

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்