விதிகளின்படி செயல்பட்ட ஜனாதிபதி | விதிகளின்படி செயல்பட்ட ஜனாதிபதி Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
விதிகளின்படி செயல்பட்ட ஜனாதிபதி

வரும், 25ம் தேதி, நாட்டின், 14வது ஜனாதிபதி பதவியேற்க உள்ள நிலையில், பிரணாப் முகர்ஜி, 81, ஜனாதிபதி பதவியில் இருந்து விலக உள்ளார். வரும், 23ம் தேதி அவருக்கு மத்திய அரசு சார்பிலும், எம்.பி.,க்கள் சார்பிலும் பிரிவுபசார விழா நடக்க உள்ளது; அதற்கு முன்னதாகவே, புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும்.மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, பிரணாப் முகர்ஜி, தன், 60 ஆண்டுகால பொது வாழ்க்கையில், பல ஏற்றங்களை பார்த்தவர்.

விதி, ஜனாதிபதி,President, பிரணாப் முகர்ஜி, Pranab Mukherjee,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,Former Prime Minister Manmohan Singh,நிதி,Finance, ராணுவம், Army, வெளியுறவு , External Affairs,முன்னாள் பிரதமர் இந்திரா, former Prime Minister Indira, லோக்சபா,Lok Sabha, ஜனாதிபதி தேர்தல், Presidential Election,அப்துல் கலாம், Abdul Kalam,


நீண்ட அரசியல் அனுபவம்


முன்னாள் பிரதமர் இந்திராவின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாகவும், நிதி, ராணுவம், வெளியுறவு என, பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சராகவும் அவரது செயல்பாடுகள், பல்வேறு கட்சித் தலைவர்களாலும் பாராட்டப்பட்டுள்ளன; ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசில், இரண்டாவது இடத்தில் இருந்து, அவர் வழிநடத்தினார். தொழில் பக்தி,

கடின உழைப்பாளி, பிரச்னைகளுக்கு சரியான தீர்வை அளிக்கக் கூடியவராக அவர் திகழ்ந்தார்.
லோக்சபாவின் முன்னவராகவும் செயல்பட்டார். 2012ல், ஜனாதிபதி தேர்தலில், 70 சதவீத ஓட்டுகளைப் பெற்று, வெற்றி பெற்றார்.
நீண்ட அரசியல் அனுபவம், பார்லிமென்ட் அனுபவம் உள்ள பிரணாப், தற்போது, நாட்டின் வரலாற்றுபக்கங்களில் மிகச் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும், பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களின் மரியாதையையும், அபிமானத்தையும், நட்பையும் பெற்றவர். நாட்டின் ஜனாதிபதிகள் ஒவ்வொருவரும், தங்கள் முத்திரையை பதித்து சென்றுள்ளனர்.

மோதல் போக்கு இல்லாமல்,


மக்களால் அதிகம் விரும்பப்படும், குழந்தைகளின் ஆசானாக, மறைந்த அப்துல் கலாம் விளங்கினார். அந்த வகையில், ஜனாதிபதியாக கடந்த, ஐந்து ஆண்டுகள் இருந்து, தற்போது அப்பதவியில் இருந்த விடைபெறும் பிரணாப் முகர்ஜியும், தனி முத்திரையை பதித்துள்ளார்.
எந்த சூழ்நிலையிலும், அரசியல் நோக்கத்தோடு செயல்படாமல், எந்தப் பாகுபாடும் இல்லாமல், அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டே, தன் அரசியலமைப்பு சட்டப் பணியைஅவர் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசுடன் மோதல் போக்கு இல்லாமல், ஆலோசனை வழங்கும், நாட்டின் முதல் குடிமகனாக அவர் சிறப்பாக செயல்பட்டார். மத்திய அரசு பல அவசர சட்டங்களை கொண்டு வந்தபோது, அதற்கு தன் அதிருப்தியை தெளிவாக தெரியபடுத்தினார்.

Advertisement


அதேபோல், பார்லிமென்ட்டை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்கியபோது, 'உங்கள் வேலையை ஒழுங்காக செய்ய வேண்டும்' என, அறிவுரையில் கடுமையையும் காட்டினார். சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு செயல்படக் கூடாது என்பதை, அருணாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட கவர்னர் ஜோதி பிரசாத் ரன்தாவாவை பதவி நீக்கம் செய்து வலியுறுத்தினார்.
ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பதால், கல்வி தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்பதை, அனைத்து இடங்களிலும் அவர் சுட்டிக்காட்டி வந்தார். கல்வியாளர்களுக்காக, ஜனாதிபதி மாளிகையை திறந்துவிட்டார். ஜனாதிபதி பொறுப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை, அடுத்த வருபவருக்கு உணர்த்தும் ஆசானாக மட்டுமல்லாமல், மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னோடியாகவும் தன் முத்திரையை பதித்துள்ளார் பிரணாப் முகர்ஜி.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (21)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-ஜூலை-201720:51:05 IST Report Abuse

Pugazh Vயார் ஜனாதிபதியா வந்தாலும் அந்த ராஷ்ட்ரபதி பவனின் எல்லா ரூமையும் சுத்தி பாக்கறதுக்குள்ள பதவிக்கு காலம் முடிஞ்சுடும். காங்கிரஸ் ஆட்சின்னா காங்கிரசின் ஆள் பிஜேபி ஆட்சின்னா அவங்க ஆள் இந்த பதவியில் இருப்பார்கள். நடிகர்கள், பாடகர்களுக்கு தேசிய விருது குடுப்பாங்க. மக்கள் தேர்ந்தெடுக்காத ஆள் என்பதால், எந்த விமர்சனத்தையும் கண்டுக்கவும் மாட்டாங்க விமர்சனங்கள் இவர்களை எட்டவும் எட்டாது.

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
18-ஜூலை-201717:05:25 IST Report Abuse

g.s,rajanபாவம் அவர் என்ன பண்ணுவார் ?? என்ன செய்ய முடியும் ?? ஏதாவது எக்குத்தப்பா செஞ்சா ஜனாதிபதி பதவியில் இருந்து பாதியிலேயே தூக்கிடுவாங்க . ஜி.எஸ்.ராஜன் சென்னை

Rate this:
ravichandran - Hosur,இந்தியா
18-ஜூலை-201716:18:50 IST Report Abuse

ravichandranநிதி அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்கள் போட்ட பட்ஜட்டுகளில் எல்லாம் முழுக்க முழுக்க நடுத்தர மற்றும் சம்பளக்காரர்களின் கழுத்தை நெறிக்கும் விதமாக நடந்துகொண்டார்...

Rate this:
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
18-ஜூலை-201715:23:32 IST Report Abuse

John Shiva  U.Kபிரணாப் முகர்ஜீ ஓர் போர் குற்றவாளி .இவர் வெளிவிவகார அமெச்சராக இருந்தபோது சிவசங்கர் மேனன்,நாராயணன் ,கருணாநிதி ,சோனியாகாந்தி ஆகியோருடன் கூட்டு சேர்ந்து ராஜபக்சாவுக்கு ஆதரவு செய்து சகல உதவி செய்து ஈழத்து தமிழர்களை கொத்துக்குண்டுகள் போட்டு அழித்தார்கள்.பெண்கள் கட்பு அழிக்கப்பட்டார்கள்.2009 இல் இவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தியது ஒரு இனப்படுகொலை .இதட்கு ஒருநாள் இந்தியா பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் .

Rate this:
spr - chennai,இந்தியா
18-ஜூலை-201714:10:11 IST Report Abuse

sprஇந்த நாட்டின் ஜனாதிபதி பதவி என்பது ஒரு அலங்காரப்பதவி என்ற அளவில் இதுவரை ஓரிருவரைத் தவிர எவரும் "கிழிக்கவில்லை" தனிப்பட்ட முறையில் கொள்ளையடிக்காமல், பதவியை தனது சுயநலத்திற்காக பயன்படுத்தாமல் இருந்தவர்கள் கூட ஓரிருவர் மட்டுமே எனவே இவரும் விதிவிலக்கல்ல இன்னும் ஓரிரு வாரங்களில் இவரைப் பற்றிய முழுவிவரம் வெளிவரும் அதற்குப் பிறகு பாராட்டலாம் பொறுத்திருங்கள்

Rate this:
s sethuraman 75 - Pondy8  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூலை-201710:56:13 IST Report Abuse

s sethuraman 75problem illatha nalla janathipathiyai thigazhnthavar! vazhga valamudan!

Rate this:
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
18-ஜூலை-201710:09:08 IST Report Abuse

என்னுயிர்தமிழகமேவணங்குகிறேன்

Rate this:
rajan - kerala,இந்தியா
18-ஜூலை-201709:14:32 IST Report Abuse

rajanஇந்த கோட்ப்பாடுகளில் இருந்து நம்ம கட்டுமர ப்ரா தீபா பாட்டீலை தவிர்த்து விடுங்கள். அது ஒரு சாப கேடு.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஜூலை-201708:27:29 IST Report Abuse

Srinivasan Kannaiyaகையை கிள்ளி பார்த்து கொள்ளுங்கள்... பிரணாப் முகர்ஜி அவருடைய பதவி காலத்தில் பொது மக்கள் கவனத்தில் கொள்ளும் அளவிற்கு என்ன செய்து விட்டார்...

Rate this:
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூலை-201710:09:12 IST Report Abuse

முக்கண் மைந்தன் Modi & கோ இதுவர கிழிச்சது என்ன...? கிள்ளாம ஒன்னிய நீயே கேட்டு பாத்துக்க........

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஜூலை-201714:46:49 IST Report Abuse

Pasupathi Subbianமுக்கண் மைந்தா முருகா ஆடி கிருத்திகை வருகிறது சற்று தீர்த்தமாடுதலை நிறுத்தி , விரதம் இருப்பா, பழனிமலை முருகனுக்கு காவடி எடு....

Rate this:
Bala - Chennai,இந்தியா
18-ஜூலை-201714:48:33 IST Report Abuse

Balaமோடின்னு சொன்னாலே உங்கள போல சிலருக்கு அவர் செயல்பாடுகளை குறை கூறுவதே வேலையா போச்சு. இதிலிருந்தே அவர் கிழிச்சது தெரியுதே....

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
18-ஜூலை-201707:28:10 IST Report Abuse

தங்கை ராஜாபிரணாப்பிற்கு பிறகு நடுவில் ஒரு பக்க்கத்தை காணோம் என்ற நிலை ஏற்படும் போலிருக்கிறது. பிரணாப் பலதரப்பட்ட மக்களின் பிரதிநிதியாக எல்லோரையும் அனுசரித்து போக தெரிந்தவர். இனி ஒரு ஐந்து வருட காலத்துக்கு அது கனவாகவே இருக்கும் போலிருக்கிறது.

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement