கேபிள் 'டிவி'யில் புதிய திரைப்படங்கள்ஆகஸ்ட் 15 முதல் மக்கள் பார்க்கலாம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கேபிள் 'டிவி'யில் புதிய திரைப்படங்கள்
ஆகஸ்ட் 15 முதல் மக்கள் பார்க்கலாம்

தமிழகத்தில், கேபிள், 'டிவி' மூலம் புதிய திரைப்படங்களை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை, கேபிள் ஆப்பரேட்டர்கள் கூட்டுறவு சங்கம் துவக்கி உள்ளது. இது, ஆகஸ்ட், 15 முதல் நடைமுறைக்கு வருகிறது.

  கேபிள் 'டிவி'யில் புதிய திரைப்படங்கள்ஆகஸ்ட் 15 முதல் மக்கள் பார்க்கலாம்

தமிழகத்தில், கேபிள் ஆப்பரேட்டர்கள் இணைந்து, டி.சி.சி.எல்., என்ற, கூட்டுறவு சங்கத்தை உருவாக்கி, மாநிலம் முழுவதும், கேபிள் இணைப்பு கொடுத்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 'செட் - டாப்' பாக்ஸ் மூலமாகவும், இரண்டு ஆண்டுகளாக கேபிள் சேவை வழங்குகின்றனர். இந்நிலையில், வாடிக்கை யாளர்களுக்கு, ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவெடுத்துஉள்ளனர்.இது குறித்து,

டி.சி.சி.எல்., உறுப்பினரும், தமிழக கேபிள் ஆப்பரேட்டர்கள் நலச் சங்கத் தலைவருமான ஆறுமுகம் கூறியதாவது:கேபிள்துறையில் அதிகரிக்கும் போட்டியை சமாளிக்க, வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதுப் புது திட்டங்களை அறிமுகம் செய்கிறோம்.

தமிழில் வெளியிடுகிறோம்
இதன் ஒரு பகுதியாக, சினிமா தியேட்டரில், புதிய படங்கள் வெளியாகும் நாளிலேயே, கேபிள், 'டிவி'யில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதன்படி, முதலில் மலையாளத்தில் வெளியாகி உள்ள திரைப்படத்தை, அதே தேதியில், தமிழில் வெளியிடுகிறோம்; மொழி மாற்றம் செய்யும்பணி நடந்து வருகிறது.

வீட்டில் இருந்த படி,


விருப்பம் உள்ளோர், அதற்கான கட்டணத்தை ஆப்பரேட்டர்களிடம் செலுத்தினால், அந்த

Advertisement

படத்தை பார்க்கலாம். இது, ஆக., 15ல் அறிமுக மாகிறது. அதேபோல, பாதியில் நிற்கும் திரைப்
படங்களின் தயாரிப்பாளர்களுக்கு நிதி உதவி அளித்து, அதை முடித்து, கேபிளில் வெளியிடுவோம்.அடுத்த கட்டமாக, ஆப்பரேட்டர்களிடம் போகாமல், வீட்டில் இருந்த படி, 'வீடியோ ஆன் டிமாண்ட்' என்ற முறையில்,
வாடிக்கையாளர்கள், புதிய திரைப்படம் உட்பட விரும்பிய திரைப்படங்களை, ஆன்லைனில் பணம் செலுத்தி பார்க்கும் வசதி அறிமுகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement