பழனிசாமி - தினகரன் மோதல் அதிகரிப்பு; கட்சி நாளிதழில் முதல்வர் படம், செய்திக்கு தடை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பழனிசாமி - தினகரன் மோதல் அதிகரிப்பு
கட்சி நாளிதழில் முதல்வர் படம், செய்திக்கு தடை

முதல்வர் பழனிசாமிக்கும், தினகரனுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. அதனால், அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில், முதல்வர் படம் மற்றும் செய்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழனிசாமி, Palanisamy, தினகரன், Dinakaran,மோதல், conflict,கட்சி,  party, நாளிதழ்,newspaper,  முதல்வர்  படம், Chief minister photo, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, அ.தி.மு.க.,AIADMK,நமது எம்.ஜி.ஆர், Namathu MGR, ஜெயலலிதா ,Jayalalithaa, பன்னீர் அணி, Panneer team


தமிழக ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வின், அதிகாரப்பூர்வ நாளிதழ், 'நமது எம்.ஜி.ஆர்.,' இதன் நிறுவனரான ஜெயலலிதா மறைவுக்குப்பின், நாளிதழ் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்ட போது, பன்னீர் அணிக்கு எதிரான செய்திகள், அதிகம் வெளியாகின. துணை பொதுச் செயலராக, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் உள்ளதால், அவர் தொடர்பான செய்திகளும், முதல்வர் பழனிசாமியின் அறிவிப்புகள், அவர் தொடர்பான செய்திகளும் வெளியாகின.


ஒதுக்கி வைப்பதாகஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் போட்டியிட்டது, முதல்வர் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம், எரிச்சலை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, தினகரனை கட்சியில் இருந்து, ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். பின், சசிகலா அணியானது, முதல்வர் பழனிசாமி அணி,தினகரன் அணி என, பிளவுபட்டது. தினகரனை, 35 எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்தனர்.

தினகரனுக்கு எரிச்சல்


அவர்களில் பெரும்பாலானவர்களை, பழனிசாமி அணியினர், தற்போது தங்கள் பக்கம் இழுத்து விட்டனர். ஆட்சி அதிகாரம் கையில் உள்ளதால், ஆட்சியையும், கட்சியையும் முழுமையாக, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நடவடிக்கைகளையும், பழனிசாமி மேற்கொண்டுள்ளார்.

'முன்னாள் முதல்வர் பன்னீர் அணியும், சசிகலா அணியும் ஆக., 5க்குள் இணைய வேண்டும். இல்லையேல், என் பணியை துவக்குவேன்' என, ஏற்கனவே தினகரன் கூறி உள்ளார். இந்நிலையில், தன் ஆதரவாளர்களை, பழனிசாமி அணியினர்இழுத்து வருவது, தினகரனுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதனால், அவரது ஆதரவாளர்கள் சிலர், சட்டசபையில் அரசுக்கு எதிராக, சில கருத்துக்களை கூறினர்.

Advertisement


இது, பழனிசாமிக்கும், தினகரனுக்கும் இடையிலான விரிசலை அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக, அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில், முதல்வர் படம் மற்றும் செய்திக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நாளிதழில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தொடர்பான செய்தி மற்றும் படம் எதுவும் இடம் பெறவில்லை.
முதல் பக்கத்தில், ஜனாதிபதி தேர்தல் மற்றும், 'சசிகலாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும், கர்நாடக, டி.ஐ.ஜி., ரூபா மீது, மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்வேன்' என, கர்நாடக மாநில செயலர், புகழேந்தி விடுத்துள்ள அறிக்கை வெளியானது. இதன் மூலம், பழனிசாமி அணிக்கும், தினகரன் அணிக்கும் இடையிலான, மோதல் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளது, வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
18-ஜூலை-201718:07:37 IST Report Abuse

Balajiஇந்த செய்தியே தினம் தினம் வருவதால் மக்கள் இதுபோன்ற செய்திகளை கண்டுகொள்வதே இல்லை........ அந்தளவுக்கு வெறுத்துவிட்டார்கள்.........

Rate this:
krishna - cbe,இந்தியா
18-ஜூலை-201717:57:33 IST Report Abuse

krishnaகட்சி அழிவு பாதையில் போய் கொண்டு இருக்கிறது.

Rate this:
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
18-ஜூலை-201715:38:54 IST Report Abuse

John Shiva   U.Kஅண்ணா தி மு க வை காப்பாற்றும் சக்தி தினகரனுக்குத்தான் உண்டு.. இரட்டை இலை சினத்துக்காக சிறை சென்ற ஒரு கட்சி விசுவாசி. பிஜேபி நடவடிக்கைகளால் பழனிசாமி ஆமாபோட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். MGR ஆல் உருவாக்கப்பட்டு அம்மா வால் வளர்க்கப்பட்ட அண்ணா தி மு க பிஜேபி இன் அரசியல் தந்திரத்தால் உடைந்துபோய் உள்ளது .இக்கட்சி தலை நிமிர்ந்து நிற்கவேண்டுமானால் ஒன்றுபட்டு தினகரனின் தலைமை ஏற்கவேண்டும்.

Rate this:
Baskar - Paris,பிரான்ஸ்
18-ஜூலை-201715:06:04 IST Report Abuse

Baskarஇவர்களின் ஆட்டம் தங்க முடியவில்லை..இந்த மோடி என்ன செய்கிறார். ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் யாருக்காவது ஆப்பு அடிப்பாரா.

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஜூலை-201714:20:04 IST Report Abuse

Pasupathi Subbianகதை வசனம் யார்? திரு நடராஜன் அவர்களா?

Rate this:
appaavi - aandipatti,இந்தியா
18-ஜூலை-201717:49:45 IST Report Abuse

appaaviஇல்லை உலகறிந்த முகமூடி......

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
18-ஜூலை-201713:24:57 IST Report Abuse

narayanan iyerஅன்பான வாசர்களே தயவுசெய்து இந்த நாலாந்தர மனிதர்களின் செய்திகளை உள்வாங்கி படிக்கவேண்டாம் . இவர்களெல்லாம் மனித இனத்தையோ அவர்களைச்சார்ந்த பண்புகளையோ கொண்டவர்கள் இல்லை .

Rate this:
krishna - chennai,இந்தியா
18-ஜூலை-201712:32:45 IST Report Abuse

krishnaசசி தினகரன் EPS OPS போன்ற தலைவர்கள்தான் பணமும் சாராயமும் வாங்கி வோட்டு போட்ட தமிழனுக்கு கிடைக்கும்.இல்லை என்றால் மீண்டும் ஸ்டாலின் என்ற கொள்ளை கூட்டம் வரும். தமிழகத்தின் சாப கேடு கருணாநிதி ஜெயா என்ற ஈன பிறவிகள். ஜெயா என்ற கொள்ளை கூட தலைவியின் சாதனை மன்னார்குடி மாபியாவை உண்டாக்கியதுதான்.

Rate this:
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
18-ஜூலை-201711:49:16 IST Report Abuse

Maverickஎப்படா கட்டி புடிச்சி உருளுவீங்க...?...

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-ஜூலை-201715:36:14 IST Report Abuse

இந்தியன் kumarமாபியா முடிவு செய்தவுடன்...

Rate this:
18-ஜூலை-201711:37:28 IST Report Abuse

karthikeyanஇவர்களுக்கு என்ன மானம். அப்புறம் மான நஷ்டம் எங்கிருந்து வந்தது?

Rate this:
Stalin - Kovilpatti,இந்தியா
18-ஜூலை-201710:30:28 IST Report Abuse

Stalinஇவனுக சண்டைதான் இப்ப பிரச்சனையா கருமம் பிடிச்சவனுக கொள்ளையடித்த பணத்தை வைத்து வாழாமல் மற்றவர்களையும் வாழ விடாமல் எரும கிடா மாதிரி படுத்துறாங்கங்க

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-ஜூலை-201717:07:29 IST Report Abuse

Kasimani Baskaranபெயருக்கு ஏற்ற கருத்து. நீ நல்லா வருவ......

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement