சிகரெட் உற்பத்தி வரி: ஜி.எஸ்.டி., கவுன்சில் முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சிகரெட் உற்பத்தி வரி: ஜி.எஸ்.டி., கவுன்சில் முடிவு

Added : ஜூலை 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: சிகரெட் உற்பத்தி மீதான கூடுதல் வரியை ஜி.எஸ்.டி., கவுன்சில் உயர்த்தி உள்ளது. ஆனாலும் சிகரெட் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படாது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
சிகரெட் மீதான ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 28 சதவீதமாக உள்ளது. இதன் மீதான கூடுதல் வரி 5 சதவீதமாக தொடர்கிறது. இத்துடன் உற்பத்தி மீதான கூடுதல் வரி 1,000 சிகரெட்களுக்கு அவற்றின் அளவுக்கு ஏற்ப, 1,591 முதல் 4,170 ரூபாய் வரை இருந்தது. ஜி.எஸ்.டி., வரி நிர்ணயத்தால் சிகரெட் தயாரிப்பாளர்கள் அரசுக்கு செலுத்தும் வரி குறைந்தது; கூடுதலாக 5,000 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் நிலை உருவானது. இதை சரி செய்யும் வகையில் சிகரெட் தயாரிப்பாளர்கள் செலுத்த வேண்டிய, உற்பத்தி மீதான கூடுதல் வரி 1,000 சிகரெட்
களுக்கு மேலும், 485 முதல் 792 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு சிகரெட் விலையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அதேசமயம் அரசுக்கு கூடுதல் வரி விதிப்பால் 5,000 கோடி ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

வரியை குறையுங்க! அமைச்சர் கோரிக்கை : ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்ததால் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்கவில்லை.எனினும் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பல்வேறு பொருட்களுக்கு
வரி குறைப்பது தொடர்பான கோரிக்கையை முன் வைத்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை