கலாம் மணிமண்டபம் திறக்க ஜூலை 27ல் மோடி வருகை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணி மண்டபத்தை திறக்க, பிரதமர் மோடி, ஜூலை, 27ல், ராமேஸ்வரம் வருகிறார். தமிழகத்தை சேர்ந்த, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, அவர் பிறந்த ஊரான, ராமேஸ்வரத்தில், மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள, பேக்கரும்பு என்ற இடத்தில், 20 கோடி ரூபாயில், மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணியை, கலாம் நீண்ட காலம் பணியாற்றிய, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டது. மணி மண்டபத்தை திறக்க, பிரதமர் மோடி, 27ம் தேதி, ராமேஸ்வரம் வருகிறார். இதை, பா.ஜ., மாநில தலைவர், தமிழிசை, நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜெ., படம் திறப்பு எப்போது: சமீபத்தில், டில்லிக்கு சென்று, பிரமதர் மோடியை சந்தித்த முதல்வர் பழனிசாமி, 'தமிழக சட்டசபையில், ஜெயலலிதாவின் புகைப்படத்தை திறக்க பிரதமர் சம்மதம் தெரிவித்துள்ளார்' என்றார். ஆனால், நேற்று ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்ததும், மோடியின், ராமேஸ்வரம் வருகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், ஜெ., படத்தை திறப்பது குறித்து, இதுவரை அவர் முடிவு செய்யவில்லை என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.