மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி கூத்தாட்டுக்குளம் கோயிலில் ஆரம்பம்| Dinamalar

மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி கூத்தாட்டுக்குளம் கோயிலில் ஆரம்பம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி  கூத்தாட்டுக்குளம் கோயிலில் ஆரம்பம்

கோட்டயம் : கேரளா எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளம் பகவதி கோயிலில், ஒரு மாதம் நடக்கும் மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.இக்கோயில் எர்ணாகுளத்தில் இருந்து 48 கி.மீ., கோட்டயத்தில் இருந்து 39 கி.மீ.,ல் கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டு
மனாவில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் பக்தர்களுக்கு, அம்மனின் பிரசாதமாக, நோய் தீர்க்கும் மருந்து வழங்கப்படுகிறது.ஆக.,16 வரை தினமும் காலை 6:30 முதல் காலை 11:30 வரை மருந்து
பிரசாதம் வழங்கப்படும். ஆடி மாத முதல் தேதியான நேற்று, இதற்கான துவக்க நிகழ்ச்சி நடந்தது. ஹோமங்கள், கஜபூஜை நடந்தது. கோயில் வளாகத்தில் 20 யானைகளுக்கு பக்தர்கள் உணவு ஊட்டினர்.கோயில் தலைவர் என்.பி.நாராயணன் நம்பூதிரி, ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண்
மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் என்.பி.பி.நம்பூதிரி, தமிழக பக்தர்கள் கலந்து கொண்டனர்.இங்கு, 'மருத்துவ கடவுள்' எனப்படும் தன்வந்திரிக்கு தனிக்கோயில் உள்ளது. தினமும், காலை 6:30 முதல் 9:30 வரை தன்வந்திரி ஹோமமும், மாலை 6:00 முதல் இரவு 7:30 வரை நோய்தீர்க்கும் பூஜையும் நடக்கிறது.மேலும் விபரங்களுக்கு, 94460 35100 ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.