'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி சதவீதம் மாற்றம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வில், தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண் சதவீதம் மாற்றப்பட்டுள்ளது.முதுநிலை பட்டம் முடித்தவர்கள், கல்லுாரி மற்றும் பல்கலைகளில், பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' என்ற தேசிய தகுதி தேர்வு அல்லது மாநில அரசின், 'செட்' என்ற மாநில தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 'செட்' தேர்ச்சி பெற்றால், எந்த மாநிலம் தேர்வு நடத்தியதோ, அந்த மாநிலத்தில் மட்டுமே, பணியில் சேர முடியும். இதில்,
ஆங்கிலம் மட்டுமின்றி, அந்த மாநில மொழியிலும், தேர்வு எழுதலாம். தேசிய தேர்வில், ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே எழுத முடியும். ஆனால், தேர்ச்சி பெறுவோர், நாடு முழுவதும் உள்ள பல்கலைகளில் பணியில் சேரலாம்.'நெட்' தேர்வை, மத்திய அரசின் பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இந்த ஆண்டு முதல், 'நெட்' தேர்வு, ஆண்டுக்கு இரு முறை என்பது ரத்து செய்யப்பட்டு, ஒரு முறையாக, நவம்பரில் மட்டும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்வில், மூன்று பாடங்களில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெறுவதுடன், தேர்வு எழுதியவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற, முதல், 15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். இந்த நடைமுறையை மாற்ற, கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, இந்த ஆண்டு முதல், மூன்று பாடங்களிலும் ஒட்டு மொத்தமாக தேர்ச்சி பெறுவோரில், முதல் ஆறு சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,இந்தியா
18-ஜூலை-201704:00:46 IST Report Abuse
.Dr.A.Joseph இதனால் என்ன நடக்கும் என்றால் NET தேர்வு எழுதுவதற்கு பதில் காசு கொடுத்து முனைவர் பட்டம் பெற்று பணியில் சேர்வர்.ஏற்கனவே 17 ஆண்டுகளாக SLET தேர்வு பெற்றவர்கள் அனுபவத்துக்கு கொடுக்கப்படும் மதிப்பெண்ணால் ,வேலை கிடைக்காமல் மதுபானக்கடைகளில் பணி புரிகின்றனர்.அனுபவத்துக்கு கொடுக்கும் மதிப்பெண்கள் அவசியமற்றவை.நிறைந்த அன்புடன்..............................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.