முடிவு எடுக்காத மின் வாரியம் : பிரதமரிடம் விரைவில் முறையீடு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

காற்றாலை உபரி மின்சாரத்தை, பிற மாநிலங்களுக்கு விற்பது தொடர்பாக, மின் வாரியம் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளதால், பிரதமரிடம் முறையிட, உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில், 7,855 மெகாவாட் திறனில், காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் விலைக்கு, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது. மே மாதம் முதல், செப்., வரை காற்றாலை சீசன். அதன்படி, காற்றாலை சீசன் துவங்கியதால், தினமும் சராசரியாக, 2,500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. ஆடி மாதம் துவங்கியதால், காற்றாலைகளில் வழக்கத்தை விட, அதிக மின்சாரம் கிடைக்க உள்ளது. அந்த மின்சாரத்தை, மின் வாரியம் முழுவதுமாக வாங்குவதில்லை. பிற மாநிலங்களுக்கு விற்கவும், முடிவு எடுக்காமல் உள்ளது. இதனால், உற்பத்தியாளர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, முறையிட உள்ளனர்.

இது குறித்து, காற்றாலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தற்போது, காற்றாலைகளில் இருந்து தினமும், 5,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது. மின் தேவை குறைவாக உள்ளதை காரணம் காட்டி, மின் வாரியம், காற்றாலை மின்சாரம் முழுவதையும் வாங்குவதில்லை. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில், காற்றாலை மின்சாரத்துக்கு நல்ல தேவை உள்ளது. அந்த மின்சாரத்தை, மற்ற மாநிலங்களுக்கு விற்று தர, மத்திய அரசின், 'பவர் டிரேடிங்' நிறுவனமும் தயாராக உள்ளது.
எனவே, உபரியாக உள்ள காற்றாலை மின்சாரத்தை, மற்ற மாநிலங்களுக்கு விற்குமாறு, பல முறை வலியுறுத்தியும், மின் வாரியம், எந்த முடிவும் எடுக்கவில்லை. பிரதமர் மோடி, சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறார். இதனால், பிற மாநிலங்களுக்கு காற்றாலை மின்சாரத்தை விற்பது தொடர்பாக, பிரதமரை சந்தித்து முறையிட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
18-ஜூலை-201703:05:19 IST Report Abuse
ramasamy naicken காசு போட்டு நஷ்டத்தை சந்தித்தால், தனியார்கள் தமிழ்நாட்டில் எப்படி முதலீடு செய்வார்கள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.