ரேஷன் அரிசி தரம் : மத்திய செயலர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி தரம் : மத்திய செயலர் ஆய்வு

Added : ஜூலை 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ரேஷனில் வழங்கும் அரிசியின் தரம், அளவு குறித்து, மத்திய உணவு துறை செயலர் ஆய்வு செய்தார். மத்திய உணவு மற்றும் பொது வினியோக திட்ட துறை செயலர், பிரீத்தி சுதன், நேற்று, சென்னை வந்தார். அவர், தலைமை செயலகம் சென்று, தமிழக கூட்டுறவு மற்றும் உணவு துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவருக்கு, ரேஷன் கடையில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவி; 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு உள்ளிட்ட விபரங்களை அதிகாரிகள் தெரிவித்தனர். பின், பிரீத்தி சுதன், ராயப்பேட்டையில் உள்ள இரு ரேஷன் கடைகளுக்கு சென்று, அரிசியின் தரம் மற்றும் அளவு குறித்து ஆய்வு செய்தார்.

இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் நிலவும் வறட்சியால், நெல் கொள்முதல் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த விபரம்,
மத்திய அதிகாரிகளிடம் விரிவாக எடுத்து கூறப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் உள்ள விதிகளுக்கு ஏற்ப, ரேஷனில் அரிசி வழங்கப்படுகிறதா என்பதை, மத்திய செயலர் ஆய்வு செய்தார். அவரிடம் கூடுதல் அரிசி, கோதுமை ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை