மதுரை எய்ம்ஸ்: ஐ.ஓ.சி., பச்சை கொடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ்: ஐ.ஓ.சி., பச்சை கொடி

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்( ஐ.ஓ.சி.,) தெரிவித்துள்ளது.
இங்கு 194.07 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வானது. ஆனால் இதன் வழியே ஐ.ஓ.சி., எரிவாயு குழாய் செல்வதால், அனுமதி கிடைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இதையடுத்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்கம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், ஐ.ஓ.சி., நிறுவனத்திற்கு ஆட்சேபனை இருக்கிறதா என கேட்டது.
அந்நிறுவனம், நிலத்தின் அடியில், 4 ஏக்கர் 20 சென்ட் நிலத்தில் மட்டுமே எரிவாயு குழாய் செல்கிறது. மருத்துவமனை அமைய ஆட்சேபனை இல்லை. 1.2 மீட்டர் ஆழத்தில் குழாய் செல்வதால் மருத்துவமனை கட்டும் போது ஐ.ஓ.சி.,யுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டால் போதும், என தெரிவித்தது.
தலைமை ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.மணிமாறன் கூறுகையில், ''தகவல் அறியும் உரிமை சட்டப்படி, ஐ.ஓ.சி., எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்துள்ளது. எனவே தென்
மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், மதுரையில் எய்ம்ஸ் அமைய மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை