சசியை அம்பலப்படுத்திய ரூபா தூக்கியடிப்பு; குற்றச்சாட்டுக்கு ஆளான டி.ஜி.பி.,க்கு காத்திருப்போர் பட்டியல் Dinamalar
பதிவு செய்த நாள் :
சசியை அம்பலப்படுத்திய ரூபா தூக்கியடிப்பு
குற்றச்சாட்டுக்கு ஆளான டி.ஜி.பி.,க்கு காத்திருப்போர் பட்டியல்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததை கண்டுபிடித்த, கர்நாடக சிறைத் துறை, டி.ஐ.ஜி., ரூபா, இடமாற்றம் செய்யப்பட்டு, 'டம்மி' பதவிக்கு துாக்கியடிக்கப்பட்டார்.
புகாருக்கு ஆளான சிறைத் துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

சிறைக்கு வரலாம்


சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, அ.தி.மு.க., சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் விரும்பும் உணவை சாப்பிடுவதற்காக, சிறப்பு சமையல் அறை, சமையல் செய்ய கைதிகள், அவரை சந்திக்க வருபவர்களுக்கென, மேஜை, நாற்காலிகள் என, சிறைக்குள்ளேயே, 'சசிகலா அலுவலகம்' அமைத்து, வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதற்காக, சசிகலா தரப்பிலிருந்து, சிறைத் துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், இரண்டு கோடி ரூபாய் பெற்றதாகவும், சிறையில் நடந்த மேலும் சில முறைகேடுகள் பற்றியும், டி.ஐ.ஜி., ரூபா அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த விவகாரம், கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, டி.ஜி.பி.,யும், டி.ஐ.ஜி.,யும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டினர். நிலைமை கையை மீறி சென்றதால், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வினய்குமார் தலைமையில், உயர்மட்ட விசாரணை குழுவை, மாநில அரசு அமைத்தது.
விசாரணை அதிகாரிகள், எந்நேரத்திலும் விசாரணை நடத்த சிறைக்கு வரலாம் என கருதிய, சத்யநாராயண ராவ், சமீபத்தில், பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று ஆய்வு செய்து, சில ஆவணங்களை திருத்தியதாக கூறப்பட்டது. இதையறிந்த, ரூபாவும் சிறைக்கு சென்று, சிறை அதிகாரி கிருஷ்ணகுமாரிடம் விளக்கம் கேட்டதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


தூக்கியடிப்புசத்யநாராயணாவின் ஆலோசனைப்படி, சசிகலா தொடர்பான தகவல்களை ரூபாவுக்கு அளித்த, 32 கைதிகள், நள்ளிரவில், கர்நாடகாவின் பல்வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர். விசாரணை அதிகாரிகள், நேற்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கு செல்வதாக இருந்த நிலையில், பிரச்னைக்கு மூல கர்த்தாவான, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், - டி.ஐ.ஜி., ரூபா, சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது, நடவடிக்கை பாய்ந்தது.
சிறைத் துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர். இதில், சத்ய நாராயணா, இன்னும் இரு வாரங்களில் ஓய்வு பெற உள்ளார். சிறையில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்திய, சிறைத் துறை, டி.ஐ.ஜி., ரூபா, போக்குவரத்து, சாலை பாதுகாப்பு துறை, டி.ஐ.ஜி., மற்றும் கமிஷனர் பதவிக்கு துாக்கியடிக்கப்பட்டார். இதனால், சிறையில் உள்ள கைதிகள், ரூபா இடமாற்றத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூபா இடமாற்றம் செய்தியறிந்த, அவரது கணவரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான, மவுனிஸ் முத்கோல், பெங்களூரு சேஷாத்ரி சாலையில் உள்ள, கர்நாடக சிறைத் துறை தலைமை அலுவலகத்துக்கு நேற்று சென்று, டி.ஜி.பி., மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை பாதுகாப்பாக வைக்கும்படியும், கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும்படியும், அங்கிருந்த ரூபாவிடம் கூறிவிட்டுச் சென்றார்.
ரூபாவை இடமாற்றம் செய்ததற்கு, கர்நாடக எதிர்க்கட்சிகள், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., அரசை கடுமையாக கண்டித்துள்ளன. முதல்வர் அலுவலகம் சப்பைக்கட்டுபோலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக, கர்நாடக முதல்வர் அலுவலகம், விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: குற்றம் சாட்டிய ரூபாவும், குற்றம் சாட்டப்பட்ட, சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயணாவும், சேவை விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை பின்பற்றாமல், மீடியாக்களிடம் அறிக்கை குறித்து விவாதித்தனர். விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், அவர்களின் இந்த நடவடிக்கை, விதிமுறைகளை மீறிய செயலாக கருதப்படுகிறது.

Advertisement


இதற்காக, விளக்கம் கேட்டு, இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விசாரணை நல்ல முறையில் நடக்கும் வகையில், டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். டி.ஐ.ஜி., ரூபா, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முறைகேட்டை கண்டுபிடித்த ரூபாவை, ஏன் இடமாற்றம் செய்ய வேண்டும்? காங்., அரசின் செயல்பாடு சரியில்லை. நேர்மையான அதிகாரிக்கு அவமானம் நேர்ந்துள்ளது.
- எடியூரப்பா மூத்த தலைவர், பா.ஜ.,

சிறையில் நடந்த முறைகேடுகளை மறக்கடிக்கும் வகையில், அதிகாரிகளை இடமாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது. நேர்மையாக விசாரணை நடக்குமா என, சந்தேகம் எழுந்துள்ளது. ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விசாரணை நடத்தினால், சக அதிகாரிகளின் முறைகேட்டை கண்டுபிடிக்க மாட்டார். எனவே, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- குமாரசாமிமூத்த தலைவர், ம.ஜ.த.,

சசிகலாவுக்கு 5 அறைகள்:


பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்த, ஐந்து புகைப்படங்கள், கன்னட, 'டிவி' சேனல்களில் நேற்று வெளியானதால், பரபரப்பு ஏற்பட்டது. அதில், சிறையின் ஒரு பகுதியில் உள்ள ஐந்து அறைகளும் சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கைதிகள், யாரும் பார்க்காதபடி, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சசிகலாவை அடைத்துள்ள அறை மட்டும், துணி போட்டு மூடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. துவைக்கப்பட்ட துணிகள், வராண்டா ஜன்னல் மீது காய வைக்கப்பட்டுள்ளன. படுக்கைகள், துணிகள், ஸ்டீல் பாத்திரங்கள் வைக்கும் வகையில், சிறப்பு ஷெல்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த படங்கள் வெளியானதால், விதிமுறைகளை மீறி, சசிகலாவுக்கு வழங்கிய சிறப்பு சலுகைகள், அம்பலமாகியுள்ளன. இதனால், சசிகலாவுக்கு மட்டுமின்றி, கர்நாடக அரசுக்கும், நெருக்கடி ஏற்படலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manasakshi - chennai,இந்தியா
18-ஜூலை-201722:12:57 IST Report Abuse

manasakshiஅங்கேயும் ஒரு ரூபா வா . ஒரு கை பாத்துர வேண்டியது தான்

Rate this:
mrsethuraman - Bangalore,இந்தியா
18-ஜூலை-201720:07:16 IST Report Abuse

mrsethuraman  கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை தலை விரித்து ஆடுது

Rate this:
M.Guna Sekaran - Madurai,இந்தியா
18-ஜூலை-201717:59:17 IST Report Abuse

M.Guna Sekaranஜனாதிபதி தேர்தல் முடிந்த உடன் எப்படியும் தமிழக சின்னம்மா விரைவில் விடுதலை ஆகிவிடுவார், உலகம் சுற்றும் வாலிபன் மோடின் மூலம். இந்தியாவில் தான் நேருமைக்கு மதிப்பில்லையா அப்படி இருக்க இந்த ரூபாக்கு தேவையா இந்த ஆசை. இனிமேல் மிரட்டல் மத்திய அரசு மூலம்.........பாவம் ரூபா

Rate this:
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
18-ஜூலை-201715:13:49 IST Report Abuse

த.இராஜகுமார் பிஜேபியின் விளையாட்டு தமிழ்நாட்டில் மேலோங்கிகிறது.. சின்னமாவின் விடுதலை உறுதி செய்ப்பட்ட நிலையில் அவரின் பெயரை கெடுப்பதற்காக பிஜேபி போக்கு காட்டுகிறது. ஓ பி எஸ் இ இப்படித்தான் தூக்கி விட்டார்கள் அவரால் ஒன்னும் செய்ய முடியவில்லை என்று தெரிந்த பின்பு சசிகலா மீது மக்களுக்கு வெறுப்பு வரும்படி சின்ன சின்ன விஷயங்களை பெரிது படுத்தி காட்டுகிறார்கள். இப்படி செய்வதால் மக்களுக்கு அனுதாபம் ஏற்படுமே தவிர வெறுப்பு ஏற்படாது என்பதை பிஜேபி புரிந்து கொள்ள வேண்டும்.

Rate this:
Madurai K.சிவகுமார் - Madurai,இந்தியா
18-ஜூலை-201717:16:08 IST Report Abuse

Madurai K.சிவகுமார்ஆம் சின்ன சின்ன சின்னம்மா விஷயங்கள்...

Rate this:
Balaji - Khaithan,குவைத்
18-ஜூலை-201714:54:10 IST Report Abuse

Balajiநொண்ணம்மா இவ்வளவு ஆணவமாக இருப்பதற்கு காரணம் சில அதிமுகவினர் அவரை தலையில் துக்கிவைத்துக்கொண்டு நெற்றியில் மண் படும்படி குனிவது தான் காரணம்......... ஜெ இறந்தவுடன் இவருக்கு மதிப்பளிக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் இருந்த இடம் தெரியாமல் சென்றிருப்பார்........... அடிமைகளாகவே இருந்து பழக்கப்பட்டவர்கள் திடீரென்று திருத்துவது என்பது சற்று சிரமம் தான்,.......... தமிழக மக்கள் தான் பாவம், இதையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.............

Rate this:
bairava - madurai,இந்தியா
18-ஜூலை-201714:06:41 IST Report Abuse

bairava நன்பர்களே அதான் ஏற்கனவே சொன்னோம்ல நீதியும், சட்டம் அதிகாரவர்கத்திற்கும் பணத்திற்கு மட்டுமே வேலை செய்யும் அப்புறம் எதுக்கு அதை பற்றி பேச்சு விமர்சனம் இங்கே நடப்பது பாசிச ஆட்சி தெரியுமோ ? சும்மா நேரத்தை வீணடிக்காதீர்

Rate this:
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
18-ஜூலை-201716:42:49 IST Report Abuse

Enrum anbudanஎங்க கர்நாடகத்திலா?...

Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
18-ஜூலை-201712:50:56 IST Report Abuse

Rafi அரசியலில் வரம்பு மீறி செயல் படுபவர்கள் இப்போது நல்லவர் ஆகிவிடுகின்றார்கள்.

Rate this:
christ - chennai,இந்தியா
18-ஜூலை-201711:40:46 IST Report Abuse

christநீதிமன்றம் சிறையில் நடக்கும் கூத்துக்களை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது அல்லது நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டது போல கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா ? சட்டம் என்பது ஏழைகளுக்கு மட்டும் தானோ ?

Rate this:
Balaji - Khaithan,குவைத்
18-ஜூலை-201714:56:22 IST Report Abuse

Balajiஇதென்ன ஏழைகளுக்கு மட்டும் தானோ என்று கேள்வி வேற?????? சட்டம் ஏழைகளை மட்டும் தான் இருப்புக்கரம் கொண்டு அடக்கும் என்பது தான் நிதர்சனம்...............

Rate this:
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
18-ஜூலை-201710:30:37 IST Report Abuse

இடவை கண்ணன் அளவுக்கு மீறி காசு சேர்த்தால், அதுவும் திருட்டு வழியில் சேர்த்தால் எவ்வளவு திமிர் வரும் என்பதன் அடையாளம்தான் இந்த செயல்பாடுகள்...அந்தமான் தனிமை சிறைக்கு அனுப்புங்க எஜமான்....

Rate this:
Sekar KR - Chennai,இந்தியா
18-ஜூலை-201715:18:29 IST Report Abuse

Sekar KRஅந்தமான் தீவையே வாங்கிடுவாங்க. தைரியம் இருந்த அனுப்புங்க....

Rate this:
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
18-ஜூலை-201710:29:00 IST Report Abuse

இடவை கண்ணன் இந்த உலகத்திலேயே சிசிடிவியால் படம்பிடிக்க முடியாத ஒரே இன்விசிபிள் ஜீவராசி சசிகலாதான். அப்பல்லோவுக்கு முன்பு போய்ஸ்கார்டன் சிசிடிவி வேலை செய்யவில்லை. ஜெ அப்பல்லோ வந்தபின்பு அப்பல்லோ சிசிடிவி வேலை செய்யவில்லை. மர்மக் கொலையும், கொள்ளையும் நடக்கும்போது கொடநாட்டு சிசிடிவி வேலை செய்யவில்லை. பரப்பன அக்ரஹாரம் ஜெயிலை சொகுசு காட்டேஜாக மாற்றியபின் ஜெயிலின் சிசிடிவி வேலை செய்யவில்லை. Worlds most powerful CCTV jammer is Sasikala.

Rate this:
Sekar KR - Chennai,இந்தியா
18-ஜூலை-201715:19:56 IST Report Abuse

Sekar KRநல்ல கண்டுபிடிப்பு. சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது நிச்சயம்....

Rate this:
Madurai K.சிவகுமார் - Madurai,இந்தியா
18-ஜூலை-201717:18:51 IST Report Abuse

Madurai K.சிவகுமார்திருநள்ளாறு அருகில் Satellite வரும் போது செயல் படாமல் போகுமாம் ( உண்மையா?), அது போலவே...

Rate this:
மேலும் 41 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement