தொழிற்கல்விக்கு இடம் தர அண்ணா பல்கலை மறுப்பு : இன்ஜி., கவுன்சிலிங் முதல் நாளே ஏமாற்றம்| Dinamalar

தொழிற்கல்விக்கு இடம் தர அண்ணா பல்கலை மறுப்பு : இன்ஜி., கவுன்சிலிங் முதல் நாளே ஏமாற்றம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தமிழக அரசு நடத்தும், இன்ஜி., கவுன்சிலிங் நேற்று துவங்கியது. இதில், அண்ணா பல்கலையின், இன்ஜி., கல்லுாரிகளில், தொழில்கல்விக்கு இடங்கள் வழங்கப்படாததால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 533 இன்ஜி., கல்லுாரிகளில், 1.67 லட்சம் இடங்களுக்கான, இன்ஜி., கவுன்சிலிங் நேற்று துவங்கியது. முதல்நாளில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண், தரவரிசை பட்டியல்படி, கவுன்சிலிங் நடந்தது.
காலை, 10:30 மணிக்கு, தொழிற்கல்வி மாற்று திறனாளி மாணவர்களுக்கும், அடுத்து, பிற மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடந்தது. நாளை பகல், 3:00 மணிக்கு தொழிற்கல்வி மாணவர்களுக்கு, கவுன்சிலிங் முடிகிறது.
இதற்கு, 2,105 பேர் விண்ணப்பித்தனர். இதில், 2,083 பேர், கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டனர். அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி கல்லுாரிகளில், 255 இடங்களும், சுயநிதி தனியார் கல்லுாரிகளில், 5,969 இடங்களும் என, மொத்தம், 6,௨௨4 இடங்கள் அனுமதிக்கப்பட்டன.
தரவரிசையில் முன்னணியில் இருந்த மாணவர்கள், அண்ணா பல்கலையின் கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரி ஆகியவற்றில், இடங்களை பெற முயன்றனர். ஆனால், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையின் சென்னை வளாக கல்லுாரிகள் மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், இடங்கள் கிடையாது என, அதிகாரிகள் கூறியதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து, தொழிற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:மத்திய அரசு தொழிற்கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என, கூறுகிறது. தமிழக பள்ளிக்கல்வியில், தொழிற்கல்வி பாடத்திட்டத்தை மாற்ற, அண்ணா பல்கலையின் மூலம், பள்ளிக்கல்வித்துறை கமிட்டி அமைத்துள்ளது. ஆனால், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை இடம் தர மறுக்கிறது. இது மாணவர்களிடையே அரசின் பாரபட்சத்தை காட்டுவதாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.