மானாமதுரையில் 44 ஏக்கரில் அமைகிறது புலிக்குளம் மாடு ஆராய்ச்சி பண்ணை : துணைவேந்தர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் 44 ஏக்கரில் அமைகிறது புலிக்குளம் மாடு ஆராய்ச்சி பண்ணை : துணைவேந்தர் தகவல்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை: ''ஜல்லிக்கட்டிற்கு புகழ்பெற்ற புலிக்குளம் மாடுகளை பாதுகாக்க சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 44 ஏக்கரில் கால்நடை ஆராய்ச்சி பண்ணை அமைகிறது,'' என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., துணைவேந்தர் திலகர் தெரிவித்தார்.
ஆராய்ச்சி பண்ணை அமைப்பது குறித்து சிவகங்கையில், கலெக்டர் மலர்விழியிடம் ஆலோசனை நடத்திய பின் அவர் கூறியதாவது: கால்நடை ஆராய்ச்சி பண்ணை மானாமதுரை அருகே மாங்குளத்தில் அமைகிறது. இதற்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பண்ணைக்காக
44 ஏக்கர் ஒதுக்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.இங்கு, தென்மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்நடை வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும். முக்கியமாக ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற புலிக்குளம் மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கால்நடை மருத்துவமனை, மருந்தகங்களின் உதவியோடு 200 க்கும் மேற்பட்ட புலிக்குளம் மாட்டின் கன்றுகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்.கால்நடை மருத்துவ பல்கலை., பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், தமிழ் ஆய்வாளர்கள் துணையோடு புலிக்குளம் மாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.
மேலும், தீவன
உற்பத்தி மையம், கால்நடைகளில் கிடைக்கும் பாலில் இருந்து தயிர், பால்கோவா, அல்வா போன்ற
மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் நிலையமும் துவக்கப்படும் என்றார்.
குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் செந்துார்குமார் உடனிருந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை