ஜனாதிபதி தேர்தலில் 99 சதவீதம் ஓட்டுப்பதிவு Dinamalar
பதிவு செய்த நாள் :
ஜனாதிபதி தேர்தலில் 99 சதவீதம் ஓட்டுப்பதிவு

நாட்டின் 14வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில் பீஹார் முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்., தலைமையிலான 18 எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிட்டனர்.

ஜனாதிபதி,தேர்தல்,99 சதவீதம்,ஓட்டுப்பதிவு


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தேர்தலின் ஓட்டுப் பதிவு தலைநகர் டில்லியிலும், அனைத்து மாநில தலைநகரங்களிலும் நேற்று நடந்தது. தேர்தலுக்காக பார்லிமென்ட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி முதல் தளத்தில் உள்ள 62ம் எண் அறை ஓட்டுச்சாவடியாக மாற்றப்பட்டிருந்தது.

சிறப்பு அனுமதி


காலையில் முதல் நபராக பிரதமர் நரேந்திரமோடி ஓட்டுச்சாவடிக்கு வந்தார். அங்கிருந்த அதிகாரிகளிடம் கலகலப்பாக பேசி சிரித்தபடி ஓட்டுப்பதிவு செய்தார். அப்போது ''சரியான நேரத்திற்கு வந்துள்ளேனா; இங்கு மட்டுமல்ல, பள்ளி பருவத்தில் இருந்தே நான் அப்படித்தான்,'' என அதிகாரிகளிடம் பிரதமர் கூற அனைவரும் சிரித்தனர்.
பிரதமருக்கு அடுத்ததாக பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா ஓட்டுப் போட்டார். குஜராத் எம்.எல்.ஏ.,வாக உள்ள அமித் ஷா தேர்தல் கமிஷனின் சிறப்பு அனுமதி பெற்று பார்லிமென்ட் ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவரது மகன் ராகுலும் ஒன்றாக வந்து ஓட்டளித்தனர்.


முந்தைய தேர்தல்களைப் போல அல்லாமல் ஓட்டளிக்கு வரும் எம்.பி.,க்களின் சொந்த
பேனாக்களை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வாங்கி வைத்துக் கொண்டனர். தேர்தல் கமிஷன் சார்பில் அளிக்கப்பட்ட பேனாவை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்திய அலுவலகர்கள் ஓட்டளித்தபின் அந்த பேனாவை வாங்கி வைத்துக் கொண்டனர்.
தமிழக எம்.பி.,க்களில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,பா.ம.க., - எம்.பி., அன்புமணி ஆகியோரைத் தவிர மற்ற எம்.பி.,க்கள் அனைவரும் வந்திருந்தனர். பன்னீர்செல்வம்
ஆதரவு எம்.பி.,க்கள் ஒன்பது பேரும் ஒன்றாக வந்து ஓட்டளித்தனர். இந்த தேர்தலில் 99 சதவீத ஓட்டுகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருணாநிதி வரவில்லை


தேர்தலில் பதிவான ஓட்டுகள் வரும் 20ல் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். சென்னையில் விறு விறுப்பான ஓட்டுப் பதிவுதமிழகத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி தவிர அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் ஜனாதிபதி தேர்தலில் பகல் 12:00 மணிக்குள் தங்கள் ஓட்டுக்களைப் பதிவு செய்தனர்.
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. மீதமுள்ள 233 எம்.எல்.ஏ.,க்கள், ஜனாதிபதி தேர்தலில்,
சென்னையில் ஓட்டளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 8:30 மணிக்கு தேர்தல் பார்வையாளர் அனுஷ் பிரகாஷ், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆகியோர் முன்னிலையில் ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டிருந்த அறை திறக்கப்பட்டது.

ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் முடிந்த நிலையில் காலை 10:02 மணிக்கு முதல்வர் பழனிசாமி முதல் ஓட்டாக தன் ஓட்டை பதிவு செய்தார். அடுத்து சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஓட்டளித்தனர். எம்.பி.,க்கள் அனைவரும் டில்லியில் ஓட்டு போட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் பா.ஜ., மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,

Advertisement

கேரளாவை சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ., பறக்கல் அப்துல்லா ஆகியோர், சென்னையில் ஓட்டளித்தனர்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான சட்டசபை பொறுப்பு செயலர் பூபதி முன் ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. ஓட்டுப்பதிவு அலுவலர்கள் மூன்று பேர் ஓட்டளிக்க வந்தவர்களிடம் கையெழுத்து பெற்று ஓட்டுச்சீட்டை வழங்கினர்.

5 மணிக்கு முடிந்தது


பா.ஜ., கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தின் ஏஜன்டாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் பழனிசாமி அணியை சேர்ந்த ஜெயராமன்; பன்னீர் அணியை சேர்ந்த செம்மலை ஆகியோர் செயல்பட்டனர்.
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மீராகுமாரின் ஏஜன்டாக தி.மு.க.,வை சேர்ந்த சக்கரபாணி, காங்கிரசை சேர்ந்த விஜயதாரணி செயல்பட்டனர். ஓட்டுப்பதிவை தமிழகத் தலைமை தேர்தல்
அதிகாரி ராஜேஷ் லக்கானி, தேர்தல் பார்வையாளர் அனுஷ்பிரகாஜ் ஆகியோர் அறையில் அமர்ந்து பார்வையிட்டனர். எம்.எல்.ஏ.,க்களில் கடைசியாக செம்மலை ஓட்டளித்தார். மாலை 5:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. பின், ஓட்டுப் பெட்டியை டில்லி கொண்டு சென்றனர்.

-நமது நிருபர் குழு-


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
18-ஜூலை-201714:59:22 IST Report Abuse

Vasanth Saminathanஉருப்படியில்லாத பதவிக்கு 99% ஓட்டுப்பதிவா

Rate this:
murugesan s - Pune,இந்தியா
18-ஜூலை-201711:54:59 IST Report Abuse

murugesan s99 % அந்த ஒரு சதவீதம்....அண்ணன் அன்பு மணி ராமதாஸ்....எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா???...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஜூலை-201708:40:03 IST Report Abuse

Srinivasan Kannaiyaஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்திய முதல் குடிமகன் என்ற ரப்பார் ஸ்டம்ப்பை புதுப்பிக்கிறோம்...

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
18-ஜூலை-201706:54:55 IST Report Abuse

தேச நேசன் தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள் சிலர் முத்திரையே இடாமல் வெற்று வாக்குசீட்டை போடப்போவதாக செய்திகள் வந்தனவே அவர்களது நிலைமை வெற்றுக்காகிதம் போல் ஆகிவிட்டதே அதனைவிட மோசம் திருவாரூர் எம் எல் ஏ . வெத்துவேட்டு

Rate this:
Amma_Priyan - Bangalore,இந்தியா
18-ஜூலை-201706:13:04 IST Report Abuse

Amma_Priyanபல ஜனாதிபதிகளையும் பிரதம மந்திரிகளையும் தான் தான் நிறுவினேன் என்று பீற்று பீற்று என்று பீற்றியது தான் மிச்சம்...இப்போது ஒரு பேப்பர் மிச்சம்... எண்ணுவது மிச்சம்... தேர்வு அறிவிப்பில் இருநூத்தி சொச்சம் வாக்குகள் குறைவது மிச்சம்.. இருந்தாலும் kovind வென்றபின் திருட்டு ரயில் தண்டவாளம் கொடுக்கும் அறிக்கைக்கு பஞ்சம் இருக்காது .

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-ஜூலை-201704:26:38 IST Report Abuse

Kasimani Baskaranசீக்கிரம் தமிழக சட்டசபையை கலைத்து விட்டு உருப்படியான ஒரு கவர்னரை நியமிக்க வேண்டும்... திருட்டு கூட்டத்துக்கு லாடம் கட்டவேண்டியது காலத்தின் கட்டாயம்... மீதம் உள்ள நான்கு ஆண்டுகளில் நிர்வாகத்தை சுளுக்கெடுத்தால் - தமிழகம் அடுத்து முன்னணி மாநிலமாக மாற பிரகாசமான வாய்ப்பு உண்டு...

Rate this:
18-ஜூலை-201715:03:10 IST Report Abuse

Rockie-பாலியல் ஜனதா கட்சி உங்களோட கருத்திலே, உங்களோட கேவலமான எண்ணமும் தெரிகிறது. காவிகள் என்னதான் தலைகீழாக நின்னாலும், ஒரு சீட்டு கூட கிடைக்காது என்பதால், நான்கு வருடம் கவர்னர் வச்சு சுளுக்கெடுப்பீங்களா? எப்படி சுளுக்கெடுப்பீங்க, இந்தியாவை கார்போரேகிட்ட வித்ததுமாதிரி, தமிழ்நாட்டையும் விற்று சுளுக்கெடுப்பீங்களா.. சட்டசபை கலைக்க ஆறு மாதத்தில், மறுதேர்தல் நடத்தபட வேண்டும் என்றோரு விதி உள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலிலே கிடைச்சதைவிட தமிழ்நாட்டில் பெரிய அடி கிடைக்கும். பகல் கனவு காணாதே...

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
18-ஜூலை-201715:46:17 IST Report Abuse

தேச நேசன் ஆர் கே நகரில் ஆறுமாதங்களில்லை ஏழெட்டு மாதமாகியும் தேர்தல் நடத்தமுடியாத தேர்தல் கமிஷனால் முழு தமிழ்நாட்டுக்கும் பல ஆண்டுகளுக்கு தேர்தல் நடத்தவா முடியும்? தமிழனுக்கும் ஜனநாயகத்துக்கு வெகு தூரம் மற்ற மாநிலங்களில் அரசியல்வாதிகள்தான் மோசம் தமிழ் நாட்டில் 99 % பொதுமக்களே யோக்கியமில்லை...

Rate this:
Renga Naayagi - Delhi,இந்தியா
18-ஜூலை-201703:59:09 IST Report Abuse

Renga Naayagiசெல்லாத ஓட்டு யாராவது போட்டிருப்பாங்க

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement