எல்லையில் வாலாட்டும் சீனாவுக்கு கிலி ஏற்படுத்திய போர் ஒத்திகை நிறைவு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எல்லையில் வாலாட்டும் சீனாவுக்கு கிலி ஏற்படுத்திய போர் ஒத்திகை நிறைவு

Added : ஜூலை 18, 2017
Advertisement
எல்லையில் வாலாட்டும் சீனாவுக்கு  கிலி ஏற்படுத்திய போர் ஒத்திகை நிறைவு

எல்லையில் வாலாட்டும் சீனாவுக்கு எச்சரிக்கையாக அமைந்த, சென்னை அருகே நடுக்கடலில் நடந்த, இந்தியா - ஜப்பான் - அமெரிக்கா நாடுகளின் கூட்டு போர் ஒத்திகை நேற்று நிறைவடைந்தது. உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகளான, இந்தியா மற்றும் அமெரிக்காவின் கடற்படைகள், 1992 முதல், ஆண்டு தோறும் கூட்டு போர் ஒத்திகையில் ஈடுபடுகின்றன. கடந்த, ௧௯௯௮ல், போக்ரான் அணுகுண்டு சோதனையை, இந்தியா நடத்தியதால், 'மலபார் எக்சர்சைஸ்' என்ற இந்த ஒத்திகை, 1998 முதல், 2002 வரை நடக்கவில்லை. அதன்பின், தொடர்ந்து நடந்து வருகிறது. ௨௦௧௬ம் ஆண்டு முதல், இந்த ஒத்திகையில், ஜப்பானும் நாடும் இணைந்துள்ளது. இந்த ஆண்டுக்கான, மலபார் கூட்டு ஒத்திகை, ஜூலை, 7 முதல், சென்னை அருகே வங்க கடலில் நடந்தது. இதில், 70க்கும் மேற்பட்ட போர் விமானங்களை சுமக்கும், அமெரிக்காவின் பிரமாண்டமான, 'நிமிட்ஸ்' போர் கப்பல், இந்தியாவின், விக்ரமாதித்தயா மற்றும் ஜப்பானின், 'சாசநாமி' மற்றும் இரு நீர் மூழ்கி கப்பல்கள் உட்பட, 21 போர் கப்பல்கள்; 95 போர் விமானங்கள் மற்றும் ஏராளமான ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன. ஜூலை, 10 முதல், 12 வரை, சென்னை துறைமுகத்தில், பல்வேறு கருத்து பரிமாற்ற நிகழ்ச்சிகள் நடந்தன. பின், தொடர்ச்சியாக வங்கக்கடலில், மூன்று நாட்டு வீரர்களும், நேற்று வரை, தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டனர். கடைசி நாளான நேற்று, போர்க்கப்பல்களில் இருந்து விமானங்கள், 'பார்மேஷன்' எனப்படும், கூட்டமாக பறந்து, எதிரியை தாக்கிவிட்டு, மீண்டும் கப்பலுக்கு திரும்பும், ஒத்திகையை வெற்றிகரமாக நடந்தன. முன்னதாக, 'இந்த நிகழ்ச்சி, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் அமைதியை சீர்குலைக்கும்' என, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசத்தில் கடற்படை தளத்தை அமைத்துள்ள, சீனா கூக்குரலிட்டது.
இந்த, 21வது, மலபார் ஒத்திகை, எந்த நாட்டையும் அச்சுறுத்துவதற்கு அல்ல என, மூன்று நாடுகளின் கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.இருப்பினும், உலகின் மூன்று பெரும் முக்கிய சக்திகள் கூட்டாக, சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதை, பறைசாற்றுவதாகவே இந்த ஒத்திகை அமைந்தது.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை