'மனித பிரமிடு அமைப்பது சாகச விளையாட்டா?'| Dinamalar

'மனித பிரமிடு அமைப்பது சாகச விளையாட்டா?'

Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மும்பை, Mumbai,மனித பிரமிடு , Human Pyramid,சாகச விளையாட்டு, Adventure Sports, தஹி ஹண்டி விழா, Dahi Hunti Festival, மும்பை ஐகோர்ட் , Mumbai High Court, மஹாராஷ்டிரா, Maharashtra,முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், Chief Minister Devendra Patnais, பா.ஜ., சிவசேனா , BJP, Shiv Sena,

மும்பை: மனித பிரமிடு அமைக்கும், 'தஹி ஹண்டி' எனப்படும், உறியடி விழாவை, சாகச விளையாட்டு என, வகைப்படுத்தியதற்கான காரணங்களை கூறும்படி, மஹாராஷ்டிர அரசுக்கு, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், மனித பிரமிடு அமைக்கும், தஹி ஹண்டி விழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும். அதில், சிறுவர்கள் பங்கேற்கக் கூடாது என்றும், 20 அடி உயரத்துக்கு மேல், மனித பிரமிடு அமைக்கக் கூடாது என்றும், 2015ல், மும்பை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், அதே ஆண்டு, ஆக., 11ல், மாநில அரசு, தஹி ஹண்டி விழாவை, சாகச விளையாட்டாக அறிவித்து, கோர்ட், விதிகள் பலவற்றை தளர்த்தியது. அதன்படி, 11 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களும், தஹி ஹண்டி போட்டியில் பங்கேற்கலாம்; அவர்களின் பெற்றோர், அனுமதிக் கடிதம் தந்தால் போதும் என, மஹாராஷ்டிர அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

மனித கோபுரம் சாகச விளையாட்டா?

இதை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட் உத்தரவை மாநில அரசு மீறியுள்ளதாக, அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தஹி ஹண்டி, சாகச விளையாட்டு என, வகைப்படுத்தியதற்கான காரணங்களை கூறும்படி, மஹாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இத்தகைய விளையாட்டில், சிறுவர்கள் எவ்வாறு பங்கேற்க முடியும் என்றும், கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. இந்த வழக்கு, ஆக., 4க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-ஜூலை-201715:12:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சாகசங்களும், சாதனைகளும், உள்ளடக்கியது தான் விறுவிறுப்பான மனித வாழ்க்கை. சாகசங்கள் இல்லை என்றால் சாதனைகள் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-ஜூலை-201714:50:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அமர்நாத் யாத்திரை கூட சாகச விளையாட்டு தான்.. கேதார்நாத் பயணம் கூட அதில் சேர்த்தியாகி விட்டது.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஜூலை-201713:55:40 IST Report Abuse
Pasupathi Subbian வின் வெளியில் பறப்பது கூட உயிர் ஆபத்து நிறைந்தது. அப்படி என்றால் உயிர் பயம் இருக்கும் வேலைகளில் ஈடுபட கூடாது என்று கூறலாமா? ராணுவத்திலும் உயிர் இழப்பு உள்ளதே , அப்போ ராணுவத்தில் சேரவேண்டாம். சமீபத்தில் பஸ் பயணத்தில் சிலர் இரும்பு கம்பிகள் குத்தி உயிர் இழந்தனர், இனி பஸ் பயணம் வேண்டாம். இப்படி அடுக்கிக்கொண்டே போனால் வேண்டத்தை தின்றுவிட்டு விதி வந்தால் சாகவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஜூலை-201712:57:32 IST Report Abuse
K.Sugavanam கிரிக்கெட்ஐ Gentlemen
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஜூலை-201712:55:12 IST Report Abuse
K.Sugavanam Gymnastics ஐ ஒரு சாகச விளையாட்டுன்னா,இதுவும் அதே மாதிரிதான்.
Rate this:
Share this comment
Cancel
Ganesh Tarun - Delhi,இந்தியா
18-ஜூலை-201708:53:10 IST Report Abuse
Ganesh Tarun ஏன் இந்திய பண்டிகைகள், கொண்டாட்டங்கள் குறிவைக்கப்படுகிறது?
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
18-ஜூலை-201708:28:19 IST Report Abuse
Amirthalingam Sinniah சாகச விளையாட்டல்ல, சாகிற விளையாட்டு. இதன் காரணமாக கையொப்பம் வாங்குகிறார்கள்.
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
18-ஜூலை-201712:50:53 IST Report Abuse
Shriramஅப்ப சல்லிக்கட்டு ?...
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
18-ஜூலை-201712:53:46 IST Report Abuse
Shriramஅப்படி பார்க்கப்போனா இந்த உலகத்துல எதுவுமே ரிஸ்க் இல்லாம இல்லை,, ரோட்டில் நடத்து போவதும் ,வண்டி ஓடுவது கூட ரிஸ்குதான்,...
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஜூலை-201712:54:01 IST Report Abuse
K.SugavanamBoxing .மற்றும் Wrestling பற்றி என்ன சொல்கிறீர்கள் ?அவை சாகச விளையாட்டுக்களா?...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஜூலை-201708:01:58 IST Report Abuse
K.Sugavanam தேவை இல்லாத வழக்குகள்..
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
18-ஜூலை-201708:01:42 IST Report Abuse
vasanthan இந்துக்கள் பண்டிகைகள், விளையாட்டுகளை தேர்தெடுத்து தடுப்பது தான் இதன் நோக்கம். பச்சைகளும், வெள்ளை பாவாடைகளும் இதன் பின்னால் இயக்கும் கூட்டம் .
Rate this:
Share this comment
AXN PRABHU - Chennai ,இந்தியா
18-ஜூலை-201709:46:03 IST Report Abuse
AXN PRABHUமுதிர்ச்சி அற்ற கருத்து... தவறானா கருத்து .. பிரச்சனை என்ன என்றே அறியாமல் எழுதப்பட்ட கருத்து மற்றவர்கள் மேல் துவேஷம் கொண்டு எழுதப்பட்ட பொய்யான கருத்து....
Rate this:
Share this comment
makkal neethi - TVL,இந்தியா
18-ஜூலை-201711:51:34 IST Report Abuse
makkal neethi வசந்தனின் மூர்க்கம் கண்ணை மறைத்ததுடன் புத்தியையும் புதைகுழிக்கு தள்ளுகிறதோ ..வேண்டாம் இந்த மூர்க்கத்தனம் இது உங்கள் அழிவுக்கே வழி வகுக்கும்...
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
18-ஜூலை-201712:41:00 IST Report Abuse
Shriramஆமாம் மாடுகள் முட்டி சாவது சாத்வீக விளையாட்டு ,, போங்கடா நீங்களும் உங்க மண்ணாங்கட்டி கருத்தும், ,, ஈ மூர்க்கத்தனம் என்பது நீங்கள் பின்பற்றும் வரையில் தொடரும்,,...
Rate this:
Share this comment
makkal neethi - TVL,இந்தியா
18-ஜூலை-201723:03:20 IST Report Abuse
makkal neethi அப்போ ராமா குட்டிக்கரணம் போடு ராமா விளையாட்டையும் சேர்த்தே வச்சிக்குடுவோமா ராமா...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஜூலை-201707:47:09 IST Report Abuse
Srinivasan Kannaiya ஜல்லிக்கட்டு கூடாது என்று சொல்லும் மத்திய அரசு இதற்க்கு ஏன் தடை விதிக்கக்கூடாது...
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
18-ஜூலை-201714:31:47 IST Report Abuse
Shriramஅட அறிவுக்கொழுந்தே சீனிவாசா மாடும் நீயும் ஒண்ணா? அதுக்கு 5 அறிவு உனக்கு ஆறறிவு, அப்புறம் அதோட எப்படி விளையாடுவாய்? மாட்ட ஏமாத்தி ஜெயிச்சுபுடலாம், ஆனா அப்பா கூட சில அறிவு கேட்ட முண்டம்கள் குத்து வாங்குதுங்கோ ,, ஆனா இங்கே மாந்தர்கள் மோதிக்கொள்கிறார்கள்,, மோதி என்பதை விட போட்டியிடுகிறார்கள்...
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
18-ஜூலை-201714:32:50 IST Report Abuse
Shriramவெளக்குவீங்கடா நீங்க,,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை