அரசு விடுதியில் இடம் வழங்க 4 மாணவியர் வேண்டுகோள்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தர்மபுரி: பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவியர், அரசு விடுதியில் இடம் கேட்டு, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், தங்கள் பெற்றோருடன் வந்து மனு கொடுத்தனர்.
இதுகுறித்து மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: பென்னாகரம் அடுத்த சிடுவப்பட்டி மற்றும் சாம்பள்ளிகாலனியை சேர்ந்த நாங்கள், பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறோம். இதில், இந்துமதி, பத்தாம் வகுப்பிலும், துர்கா, அனிதா, அஞ்சு ஆகியோர், பிளஸ் 1 வகுப்பும் படித்து வருகிறோம். எங்கள் ஊரில் இருந்து, பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு, 25 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில், பள்ளி நேரத்துக்கு சரியாக அரசு பஸ்கள் வருவதில்லை. இதனால், நாங்கள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு சென்றுவர முடிவதில்லை. நேரம் தவறி பள்ளிக்கு சென்றால், பள்ளி ஆசிரியர்களும் எங்களை வகுப்பறையில் அனுமதிப்பதில்லை. இதனால், எங்களின் வருகைப்பதிவேடு, கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, பள்ளி அருகில் உள்ள பென்னாகரம் அரசு விடுதியில் தங்கி படிக்க இடம் கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால், விடுதியில் இடம் தராமல், விடுதி அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, இந்த அரசு விடுதியில் தங்கி படிக்க, எங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.