அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

காட்சி பொருளாக தண்ணீர் தொட்டி: ஓசூர், ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரில், நகராட்சி நிர்வாகம் சார்பில், சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டு, தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்பாமல், காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டும்.
தொங்கும் விளம்பர போர்டால் ஆபத்து: கிருஷ்ணகிரி பழையபேட்டை, மகாராஜ கடை ரோடு, நேஜாஜிரோடு, ஆட்டோ ஸ்டாண்ட் சந்திக்கும், நான்கு வழி சாலையில் உள்ள சிக்னல் கம்பத்தில், விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த, ஒரு மாதமாக நகரில் காற்று பலமாக வீசிவருகிறது. இதனால், சிக்னல் கம்பத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டு சேதமாகி, தகரம் கீழே தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தகரமும் காற்றில் பறந்து சாலையில் செல்வோர் மீது விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதை உடனடியாக அகற்ற வேண்டும்.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: கிருஷ்ணகிரி அடுத்த சுண்டேகுப்பம் தென்பெண்ணை ஆற்றிலிருந்து, தேவசமுத்திரம் ஏரி வழியாக, நகராட்சி சுத்திகரிப்பு நிலையத்திற்கு குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாய் செல்லும் வழியில், தேவசமுத்திரம் ஏரி அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குழாய் உடைப்பால், ஏராளமான குடிநீர் ஊற்று போல் பீய்ச்சி அடித்து வீணாகி வருகிறது. எனவே, குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை