ஓசூரில் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூரில் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: ஓசூரில், மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூரில், 300 க்கும் மேற்பட்ட மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மீனவர் சங்கம் சார்பில், 2011 முதல், தர்கா சந்திராம்பிகை ஏரி, மயில்ராவணன் ஏரி, தேவர் ஏரி ஆகியவை குத்தகைக்கு எடுக்கப்பட்டு, மீன் பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த, ஐந்து ஆண்டுகளாக, சங்கத்தின் மூத்த பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் தலைவர் ரவி ஆகியோர், உறுப்பினர்களுக்கு தெரியாமல், தீர்மானம் நிறைவேற்றி, அவர்களது பெயரில் ஏரியை குத்தகைக்கு எடுத்து, லாபம் சம்பாதித்து வருவதாக குற்றம் சாட்டிய, 80 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர் குமார் தலைமை வகித்தார். பாபு, வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மீன் பிடிப்பதில் கிடைக்கும் வருவாயை, சங்க உறுப்பினர்கள் அனுமதியின்றி செலவு செய்து வரும், தலைவர் ரவி மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சங்க உறுப்பினர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை