கால்வாயில் குழாய் பதித்து தண்ணீர் திருடி விற்பனை: டிராக்டர்களை சிறை பிடித்து விவசாயிகள் மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கால்வாயில் குழாய் பதித்து தண்ணீர் திருடி விற்பனை: டிராக்டர்களை சிறை பிடித்து விவசாயிகள் மறியல்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: பாசன கால்வாயில் குழாய் பதித்து, தண்ணீரை எடுத்து விற்பனை செய்வதாக கூறி, காவேரிப்பட்டணம் அருகே, டிராக்டர்களை சிறை பிடித்து, விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையி லிருந்து, கடந்த, 15ல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இடது மற்றும் வலதுபுறக்கால்வாய் மூலம் ஏரிகளுக்கு செல்கிறது. காவேரிப்பட்டணம் அருகே மிட்டள்ளி, மோட்டுப்பட்டி கிராமத்தின் வழியாக பாசன கால்வாயில் செல்லும் தண்ணீரை, சிலர், திருட்டுத்தனமாக பூமிக்கு அடியில் குழாய் அமைத்து, கிணற்றுக்குள் திருப்பி விட்டு வருகின்றனர். கால்வாய் தண்ணீரை கிணற்றுக்குள் நிரப்பி, டிராக்டர்கள் மூலம் விற்பனை செய்கின்றனர். இதை கண்டித்து, நேற்று மிட்டள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், தண்ணீர் ஏற்ற வந்த, 30க்கும் மேற்பட்ட டிராக்டர்களை சிறை பிடித்து, மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது: கால்வாய் நீரை குழாய் மூலம் திருடாமல் இருந்தால், ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும். ஆனால், வழியில் சிலர் தண்ணீரை குழாய் மூலம் உறிஞ்சி விடுவதால், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. பாசனத்திற்கு வரும் தண்ணீரை கிணற்றுக்குள் விட்டு, ஒரு டிராக்டர் லோடு தண்ணீரை, 700 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தகவலறிந்து வந்த காவேரிப்பட்டணம் போலீசார், விவசாயிகளை சமாதானம் செய்து, டிராக்டரை விடுவித்து, ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பினர். மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாயில் ஆய்வு மேற்கொண்டு, புதைக்கப்பட்டிருந்த குழாய்களை அகற்றி, சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை