சின்னாறு அணையில் சப்-கலெக்டர் ஆய்வு: வி.ஏ.ஓ.,வுக்கு 'சஸ்பெண்ட்' எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சின்னாறு அணையில் சப்-கலெக்டர் ஆய்வு: வி.ஏ.ஓ.,வுக்கு 'சஸ்பெண்ட்' எச்சரிக்கை

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: சூளகிரி அருகே சின்னாறு அணையில் ஆய்வு செய்த சப்-கலெக்டர் சந்திரகலா, 'மண் கடத்தலை தடுக்காவிட்டால், சஸ்பெண்ட் செய்வேன்' என, வி.ஏ.ஓ.,வை எச்சரித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சின்னாறு அணை, 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிரம்பாமல் உள்ளது. இதனால் சின்னாறு அணையில் இருந்து, மர்ம நபர்கள் திருட்டுத் தனமாக மண் அள்ளி வருகின்றனர். வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால், மண் கடத்தல் தொடர்கிறது. இந்நிலையில், நேற்று சப் - கலெக்டர் சந்திரகலா, வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் ஆகியோருடன் சென்று, சின்னாறு அணையில் ஆய்வு செய்தார். அப்போது, அவருடன் இருந்த சூளகிரி டவுன் வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் (பொறுப்பு) என்பவரிடம், மண் கடத்தல் குறித்து கேட்ட சப் - கலெக்டர், வரும் காலங்களில் மண் கடத்தலை தடுக்காவிட்டால், சஸ்பெண்ட் செய்து விடுவேன் என வி.ஏ.ஓ.,வை எச்சரித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை