சாலை விபத்தில் வாலிபர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் வாலிபர் பலி

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: சூளகிரி அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த திராடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 22, விவசாயி; இவர் நேற்று முன்தினம் இரவு, ஸ்பௌண்டர் பைக்கில், சூளகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். காருபாலா அருகே இரவு, 10:00 மணிக்கு சென்ற போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். விபத்து நடந்த இடத்திற்கு அருகே, டி.வி.எஸ்., மொபட் சாவி ஒன்றும், வாட்ச் ஒன்றும் கிடந்தது. அதனால், ஜெய்சங்கர் சென்ற பைக் மீது மோதியது, டி.வி.எஸ்., மொபட்டாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை