ஓசூர்: சூளகிரி அருகே மணல் கடத்திச் சென்ற லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர். சூளகிரி எஸ்.ஐ., சுமித்ரா தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் பகல், 12:00 மணிக்கு, சின்னாறு சாலையில் உள்ள பேடப்பள்ளி பாலத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, மணல் கடத்திச் செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், சூளகிரி அடுத்த தேக்கலப்பள்ளியை சேர்ந்த லாரி டிரைவர் பிரமோத், 24, என்பவரை கைது செய்தனர்.