செய்தி எதிரொலி: உயிருக்கு போராடும் பெண்ணிற்கு பண உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி எதிரொலி: உயிருக்கு போராடும் பெண்ணிற்கு பண உதவி

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஓசூர்: ஓசூரில், இரு கிட்னிகள் செயலிழந்து, உயிருக்கு போராடி வரும் இளம் பெண்ணுக்கு, தினமலர் செய்தி எதிரொலியாக, மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, நேரு நகரில் உள்ள பாரதியார் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி வீணா. இவர்களுக்கு ஷாலினி, 21, என்ற மகளும், அருண், 17, என்ற மகனும் உள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,100 மதிப்பெண் பெற்ற ஷாலினி, ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லூரியில், கடந்த ஏப்ரலில், 88 சதவீத மதிப்பெண்ணுடன் இன்ஜினியரிங் முடித்தார். கடந்த பிப்.,ல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, உடல்நிலை சரியில்லாமல், ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாலினியை பரிசோதனை செய்த டாக்டர்கள், இரு கிட்னியும் செயலிழந்து விட்டதாக தெரிவித்தனர். கடந்த, மூன்று ஆண்டுக்கு முன் கணவர் வெங்கடேசன் இறந்த நிலையில், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் முன் பெட்டிக்கடை நடத்தி வரும் வீணா, தன் மகளின் மருத்துவ சிகிச்சைக்கு, பல லட்சம் ரூபாய் பணம் தேவை என்ற நிலையில், பணம் இல்லாமல் தவித்து வருகிறார். இதுகுறித்த செய்தி, தினமலர் நாளிதழில், கடந்த ஜூன், 25 ல் செய்தி வெளியானது. இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர், வீணாவை தொடர்பு கொண்டு, 95 ஆயிரம் ரூபாய் வரை அவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். இந்நிலையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில், ஆங்கிலத்துறை தலைவராக உள்ள தமிழ்ச்செல்வி என்பவர், ஷாலினி மருத்துவ செலவிற்கு வழங்க, 5,000 ரூபாய்க்கான காசோலையை, கிருஷ்ணகிரி கலெக்டர் கதிரவனுக்கு அனுப்பினார். இந்த காசோலை, நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஷாலினியின் தாய் வீணாவிடம் வழங்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை