பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி வாயில் கறுப்புத் துணி கட்டி விவசாயிகள் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி வாயில் கறுப்புத் துணி கட்டி விவசாயிகள் மனு

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: பாரூர் ஏரியில் இருந்து, முதல் போக சாகுபடிக்கு, உடனடியாக தண்ணீர் திறந்து விடக்கோரி, இரண்டு விவசாயிகள் வாயில் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு, மெழுகு வர்த்தி ஏந்தியவாறு டி.ஆர்.ஓ.,விடம் மனு அளித்தனர்.
போச்சம்பள்ளி அடுத்த பாரூர் ஏரிக்கு, கே.ஆர்.பி., அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பாரூர் ஏரியில் தேக்கி வைக்கப்படும், தண்ணீரை கொண்டு பாரூர், அரசம்பட்டி, பழனம்பாடி, கீழ்குப்பம், புலியூர் உட்பட பல கிராமங்களை சேர்ந்த, 4,200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 15.6 அடி உள்ள ஏரியில் தற்போது, 13 அடி தண்ணீர் உள்ளதால், முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என, ஆயக்கட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்தும், இதுவரை தண்ணீர் திறக்கவில்லை. இந்நிலையில், கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மாதன், பழனிசாமி ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு, வாயில் கறுப்புத் துணியை கட்டிக் கொண்டும், மெழுகுவர்த்தி ஏந்தியபடியும் வந்து, டி.ஆர்.ஓ.,சாந்தியிடம் மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: கே.ஆர்.பி., அணையில் இருந்து, பாரூர் ஏரிக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி மனு அளித்தோம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் காலதாமதமாக தண்ணீர் விட்டுள்ளனர். இதனால் எங்களது முன்னுரிமை பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், கே.ஆர்.பி., அணையில் இருந்து, தண்ணீர் பாரூர் ஏரிக்கு வழங்க வேண்டும் என, அணை கட்டுவதற்கு முன்பே அரசாணை வெளியிட்டுள்ளனர். இதை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை