ஏரி மண் கடத்திய லாரிகளுக்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏரி மண் கடத்திய லாரிகளுக்கு அபராதம்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் தலைமையில், வருவாய்த்துறையினர், காட்பாடி அடுத்த லத்தேரியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஏரியில் சிலர் ஜே.சி.பி., மூலம், மணல் அள்ளி, அதை, இரண்டு டிப்பர் லாரிகளில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அதிகாரிகளைப் பார்த்ததும் அவர்கள் தப்பியோடினர். இதனால், இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும், ஒரு ஜே.சி.பி., இயந்திரத்தை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த வாகனங்கள் தொண்டான்துளசி கிராமத்தைச் சேர்ந்த ராஜி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. இதையடுத்து, இரண்டு டிப்பர் லாரிகளுக்கும், தலா, 25 ஆயிரம் ரூபாய், ஜே.சி.பி.,க்கு, 40 ஆயிரம் ரூபாயை, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் அபராதமாக விதித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை