வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி: அ.தி.மு.க., பிரமுகர் மீது விவசாயி புகார்| Dinamalar

வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி: அ.தி.மு.க., பிரமுகர் மீது விவசாயி புகார்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

வேலூர்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்த, வேலூர், அ.தி.மு.க., பிரமுகர் மீது, விவசாயி ஒருவர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த செஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 65, விவசாயி. இவர், வேலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு நேற்று காலை வந்து புகார் ஒன்று கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என் மகன் பாபுவுக்கு, 25, அரசு வேலை வாங்கித் தருவதாக, லத்தேரியைச் சேர்ந்த முன்னாள், அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலரும், வட்ட பிரதிநிதியுமான பாபு, கடந்த பிப்.,யில், மூன்று லட்சம் ரூபாய் வாங்கினார். ஆனால், இது வரை அரசு வேலை வாங்கித்தரவில்லை. கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டால், மிரட்டல் விடுக்கிறார். எனவே, பாபுவிடமிருந்து பணத்தை பெற்றுத்தருவதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். மனுவின் அடிப்படையில் விசாரணை செய்ய, எஸ்.பி., பகலவன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.