டேங்க் ஆப்ரேட்டர்கள் உண்ணாவிரதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டேங்க் ஆப்ரேட்டர்கள் உண்ணாவிரதம்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், டேங்க் ஆப்ரேட்டர்கள், சங்க தலைவர் குப்பன் தலைமையில், நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது, ஊராட்சி குடிநீர் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு, கால முறை ஊதியம் வழங்க வேண்டும். கடந்த, 2013 அக்., 31ல் பணி நியமனம் செய்யப்பட்டு, மூன்று ஆண்டு பணி முடித்த துப்புரவு பணியாளர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். டேங்க் ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, ஓராண்டுக்கு, இரண்டு சீருடைகள், ஒரு டார்ச் லைட் மற்றும் ஒரு சைக்கிள் வழங்க வேண்டும். ஊராட்சி குடிநீர் மேல்நிலை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய, மாதம், 500 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை