கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு மருத்துவமனை சென்ற வாலிபர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு மருத்துவமனை சென்ற வாலிபர்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆரணி: ஆரணி அருகே, கடித்த பாம்புடன், மருத்துவமனைக்கு வாலிபர் சிகிச்சைக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 28, டிப்ளமோ பட்டதாரி. இவர், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு அவரை கடித்தது. தூக்கத்தில் இருந்து அலறி எழுந்த செந்தில்குமார், தன்னை கடித்த பாம்பை அடித்து கொன்றார். பின், '108' அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், ஆரணி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது தன்னை கடித்த பாம்பையும் உடன் எடுத்துச் சென்றார். அங்கு, உடனடியாக விஷத்தை முறிக்க, செந்தில் குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், அவரை கடித்தது சாரைப்பாம்பு என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை