மர்மக் காய்ச்சலுக்கு சிறுவன் பலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மர்மக் காய்ச்சலுக்கு சிறுவன் பலி

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: மர்மக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான். சிறுவன் எதனால் இறந்தான் என்பது குறித்து அறிய, உடலை உடற்கூறு ஆய்வு செய்ய, மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் அருகே தண்டரை கிராமத்தை சேர்ந்த அந்தோணி விமல்ராஜ் மகன் பிரேம்சரண், 4, இவன், கடந்த சில நாட்களாக, காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தான். நேற்று முன்தினம் மாலை, திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று மதியம், 2:30 மணிக்கு இறந்தான். தண்டரை கிராமத்தில், கடந்த ஆண்டு அக்., 25ல், மர்மமான முறையில் விஷம் கலந்த உணவை சாப்பிட்ட, வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த, ஆறு பேர் அடுத்தடுத்து பலியாயினர். தற்போது இறந்த சிறுவன், இறந்தவர்களுக்கு உறவு முறை என்பதால், சிறுவனுக்கும் அதன் தாக்கம் இருக்குமா என்ற சந்தேகத்தில், சிறுவனின் உடலை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். அதன் பிறகே, சிறுவன் எதனால் இறந்தான் என்பது தெரியவரும் என, டாக்டர்கள் கூறினர். இந்த சம்பவம், தண்டரை கிராமத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை