சொத்து தகராறு: அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்து தகராறு: அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, பாகப்பிரிவினை தகராறில், அண்ணனை கத்தியால் குத்திய தம்பியை, போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அருகே மாதலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன், 60; இவருக்கும், இவரது தம்பி ராமலிங்கம், 45, என்பவருக்கும் இடையே, சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு, சந்திரன் தனது வீட்டின் முன் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ராமலிங்கம், சந்திரனிடம் சொத்து பாகப்பிரிவினை செய்வது தொடர்பாக, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராமலிங்கம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சந்திரனை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த சந்திரனை, அவரது குடும்பத்தினர் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மங்கலம் போலீசார் விசாரித்து, ராமலிங்கத்தை நேற்று கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை