புகார் பெட்டி - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சீரான குடிநீர் வினியோகிக்க வேணும்! கரூர் அடுத்த சோமூரில், நாள்தோறும் சீராக குடிநீர் வினியோகம் செய்வது இல்லை. இதனால், பொதுமக்கள் தனியார் போர்வெல் குழாய்களை தேடி செல்லும் அவலநிலை உள்ளது. போர்வெல் குழாய்களிலும் தண்ணீர் இல்லாத நிலை உள்ளதால், பொதுமக்கள் பாதிக்கின்றனர். தண்ணீருக்காக, தொழிலுக்கு கூட செல்ல முடியவில்லை. எனவே, போர்வெல் குழாய்களை சரிசெய்து, சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

- பி.பார்த்தீபன், சோமூர்.

சாக்கடை கால்வாய் அடைப்பால் அவதி: கரூர் அடுத்த, சோமூர் சுற்றுவட்டார பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆனால், சாக்கடை கழிவுநீர் செல்லும் வகையில் வாய்க்கால் வசதியில்லை. ஏற்கனவே உள்ள சாக்கடை கால்வாயிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை நாள்தோறும் சுத்தம் செய்வது இல்லை. இதனால், சோமூரில் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், சாக்கடை கால்வாய்களை தூர்வார, உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- டி.இளையராஜா, சோமூர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை