Will keep punishing you for LoC misadventures, India warns Pakistan | எல்லையில் அத்துமீறல்: பாக்.,கிற்கு இந்தியா எச்சரிக்கை| Dinamalar

எல்லையில் அத்துமீறல்: பாக்.,கிற்கு இந்தியா எச்சரிக்கை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
எல்லை, Border, இந்தியா எச்சரிக்கை,India Warning,புதுடில்லி,New Delhi,  பாகிஸ்தான் ராணுவம், Pakistan Army,ஜெனரல் ஏகே பட், General AK Bhatt,
Share this video :
பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

புதுடில்லி: எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஹாட்லைன்:

சமீப நாட்களாக, பாகிஸ்தான் ராணுவம், எல்லை காட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 4 இந்திய வீரர்களும், பொது மக்களும் பலியாகியுள்ளனர்.சிலர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து இந்திய ராணுவத்தின் போர் நடவடிக்கைகளுக்கான லெப்டினன் ஜெனரல் ஏகே பட், பாகிஸ்தான் ராணுவ அதிகாரியை ஹாட் லைனில்அழைத்து பேசினார்.


எச்சரிக்கை:

இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: பட், பாகிஸ்தான் அதிகாரியிடம், எல்லையில் நடக்கும் எந்த அத்துமீறலுக்கும் உரிய பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு உரிமையும் உள்ளது. எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதையே இந்தியா விரும்புகிறது. இதற்கு பாகிஸ்தானும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடுருவல் சம்பவங்கள் நடப்பதை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இதற்காக ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் எல்லையில், இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பயங்கரவாத முகாம்கள் துடிப்பாக செயல்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


அத்துமீறல்:

இந்நிலையில், காஷ்மீரின் கெரன் செக்டார் பகுதியில் பாதுகாப்பு பணியில்இருந்த இந்திய ராணுவம், பாகிஸ்தான் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டு ராணுவத்திற்கு ஆயுதங்களை கொண்டு சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் அந்த வாகனம் நீலம் நதியில் கவிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கடந்த ஜனவரி முதல் தற்போது வரை பாகிஸ்தான் 239 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இது கடந்த காலங்களை விட அதிகமாகும் என ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூலை-201714:08:23 IST Report Abuse
PRABHU மன்மோஹன்னும் எச்சரிக்கை செய்தார்...மோடியும் அதேதானா...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
18-ஜூலை-201712:35:46 IST Report Abuse
K.Sugavanam சர்ஜிக்கல் ஸ்டரைக்குக்கு பின் எவ்வளவு முறை எச்சரிக்கை விடுவது?தக்க பதிலடிகொடுக்காமல் ....அடிச்சி நொறுக்குங்க...
Rate this:
Share this comment
Cancel
Kalirajn -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூலை-201710:33:35 IST Report Abuse
Kalirajn இதுவும் சீனாவின் சூழ்ச்சியே...
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
18-ஜூலை-201710:07:07 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இதற்க்கு பதிலடி கொடுத்தால் .... அதனை கூட்டமாக வந்து இந்தியாதான் தொல்லை கொடுப்பதாக கூக்குரல் இடும்
Rate this:
Share this comment
Cancel
Indira -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூலை-201709:56:21 IST Report Abuse
Indira நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோமில்ல .சுரணையும் இருக்காது. வெளியில காண்பிச்சுக்கவும் மாட்டோம்
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
18-ஜூலை-201710:34:12 IST Report Abuse
sundaramஇதுக்கும் அறுபது ஆண்டு கால காங்கிரஸ்காரன் தான் காரணம்ன்னு கூவுவோமில்லே...
Rate this:
Share this comment
Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா
18-ஜூலை-201712:11:53 IST Report Abuse
Jey Kay - jeykay@email.comஇதற்கு இதுக்கும் அறுபது ஆண்டு கால காங்கிரஸ்காரன் தான் காரணமா என்று பார்ப்போம், நேருவின் தவறான அணுகுமுறையால் காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றியது, காங்கிரஸ் சில நன்மைகளையும் செய்துள்ளது, அதாவது வங்காளம் உருவாக உதவியது மட்டுமே. அதே வேளையில் 1971 போரில் பாகிஸ்தான் சரணடைந்த போது பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரியிருக்கலாம். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இந்திரா பாகிஸ்தானை மேலும் சிறு துண்டுகளாக உடைக்க திட்டமிட்டிருந்தார், இந்திராவின் அமைச்சரவில் இருந்த அதே காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவ்விஷயத்தை அமெரிக்காவின் கவனத்திற்கு கொண்டு போனதன் மூலம் அது தடுக்கப்பட்டது என்கிற கருது உண்டு. மேலும் அதே நபர் பிரதமராக இருந்த காலத்தில் பாகிஸ்தானின் ஆரம்ப கால அணுஆயுதம் தயாரிக்கும் விஷயத்தை பாகிஸ்தானில் உளவுபார்த்த இந்தியாவின் Research and Analysis Wing (RAW) இந்திய அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியதை பாகிஸ்தானின் சர்வாதிகாரி ஜியா-உல்-ஹக்கிற்கு தெரிவித்தார், மேலும் பாகிஸ்தானில் இயங்கிய RAW network கையும் அம்பலப்படுத்தி அவர்களின் இறப்பிற்கு காரணமாக இருந்தார். பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷான்-இ-பாக்கிஸ்தான் பெற்ற ஒரே இந்தியரும் அவரே. விருது பெற்றதற்கான காரணத்தை தேடிப்பாருங்கள் உண்மை விளங்கும். காஷ்மீரையும் பாகிஸ்தானையும் கிடைத்த அருமையான வேளையில் காங்கிரஸ் சரியாக கையாளவில்லை என்பதே திண்ணம்...
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஜூலை-201713:47:29 IST Report Abuse
Pasupathi Subbianதிரு முகமத் அலி ஜின்னாவுக்கும், ஜவஹர்லால் நேரு அவர்களுக்கும் உள்ள சம்பந்தம் தெரியுமா? நேருவின் ஆதரவில்லாமல் இந்தியா, பாகிஸ்தான் பிளவு பட வில்லை என்பது தெரியுமா? எதோ எங்கேயோ யாரோ பதிந்த கருத்தை வைத்துக்கொண்டு திரு மொரார்ஜி தேசாய் அவர்களை புழுதிவாரி தூற்றும் தங்களுக்கு இந்த பிரச்சனையின் ஆரம்பம் பற்றி தெரியவா போகிறது....
Rate this:
Share this comment
Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா
18-ஜூலை-201714:52:27 IST Report Abuse
Jey Kay - jeykay@email.comபாகிஸ்தான் மொரார்ஜி தேசாய் அவர்களுக்கு நிஷான்-இ-பாக்கிஸ்தான் வழங்கியதன் காரணத்தை தங்கள் கோணத்தில் பதிவிடுங்கள், உண்மையான காரணத்தை நானும் தெரிந்து கொள்கிறேன்....
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-ஜூலை-201709:48:12 IST Report Abuse
Kasimani Baskaran வம்பு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி அறிவுறுத்துகிறார்கள்.. அவர்கள் வழியிலேயே பதில் சொல்ல வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.