குடிநீர் வாரிய சங்கம் ஊதியம் கேட்டு மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் வாரிய சங்கம் ஊதியம் கேட்டு மனு

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சங்க மாவட்ட கிளை சார்பில், கலெக்டர் கோவிந்தராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கரூர் கிராம குடிநீர் திட்ட கோட்டம், க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உட்பட கூட்டுக் குடிநீர் திட்டங்களில், 689 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதை போல ஊதியம் வழங்க வில்லை. ஒப்பந்ததாரர்கள் தங்கள் விருப்பம் போல் சொற்ப தொகையை ஊதியமாக வழங்கி வருகின்றனர். இவற்றை கண்காணிக்க வேண்டிய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், அதுபற்றி கண்டுகொள்ளாமல் உள்ளனர். 'ஒப்பந்ததாரர் முறையாக ஊதியம் வழங்கவில்லை என்றால், குடிநீர் வடிகால் வாரியம் அளிக்க வேண்டும்' என, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை