மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் துவக்கி வைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் துவக்கி வைப்பு

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர், புனித தெரசா துவக்கப்பள்ளியில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நுற்றாண்டு விழா முன்னிட்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாற்றுத் திறனாளிகள் மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் கோவிந்தராஜ் துவக்கி வைத்து பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம், இன்று கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி; நாளை அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி; 20ல் லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி; 21ல் தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி; 24ல் க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி. வரும், 25ல் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடக்கிறது. முகாம்களில், ஆறு முதல், 18 வயதுடைய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு காது, பார்வை, உடல் இயக்க குறைபாடு உள்ளிட்டவை தொடர்பான சிகிச்சை மற்றும் பரிசோதனை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். முகாமில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை