குளித்தலை அரசு மருத்துவமனைக்கு மர்மக் காய்ச்சல் பாதிப்பால் மக்கள் படையெடுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குளித்தலை அரசு மருத்துவமனைக்கு மர்மக் காய்ச்சல் பாதிப்பால் மக்கள் படையெடுப்பு

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: குளித்தலை அரசு மருத்துவ மனையில், மர்மக் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
குளித்தலை நகர பகுதியில், சுகாதார வசதிகள் முறையாக மேற்கொள்ளாததால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பல்வேறு தரப்பினரும், மர்மக் காய்ச்சல் பாதிப்பால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவர்கள், குளித்தலை அரசு மருத்துவமனைக்கு, புறநோயாளிகளாக வருவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த மருத்துவமனையில், ரத்த பரிசோதகர்கள், மூன்று பேர் இருக்க வேண்டிய இடத்தில், இருவர் மட்டுமே இருப்பதால், உள் மற்றும் புறநோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அங்குள்ள பணியாளர்களும், ரத்த பரிசோதனையை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். குளித்தலை அடுத்த, மேட்டு மருதூர் மகேந்திரன் மகன் பப்லு, 3, வெங்கடாசலம் மகள் சோபிகா, 19, உள்ளிட்டோர் மர்மக் காய்ச்சலால், கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் குளித்தலையை சுற்றியுள்ள கிராமமக்கள், 20க்கும் மேற்பட்டோர், காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுகின்றனர். நகராட்சி சுகாதார பணியாளர்களின் அலட்சிய போக்கினால், பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மாசு, சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை. எனவே, காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள கிராமங்களில், சுகாதார துறையினர் முறையாக ஆய்வு செய்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை