அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்| Dinamalar

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, மனோகரா கார்னருக்கு, வணிக கட்டடங்கள் இடையே வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை ஓட்டல்கள், டீக் கடைகள் நடத்தி வருகிறவர்கள் ஆக்கிரமித்து பொருட்களை வைத்துள்ளனர். இதனால், பஸ் ஸ்டாண்டில் இருந்து மனோகரா கார்னர் செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இதனால், பஸ் ஸ்டாண்டை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி, கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோ - பார்க்கிங் வாகன நிறுத்தம்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரா கோவில் பகுதியில், வாகனங்களை நிறுத்த தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், போலீசார், 'நோ - பார்க்கிங்' என, அறிவிக்கப்பட்ட இடங்களில், பலர் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர். போலீசாரும் அதை கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால், காலை மற்றும் மாலை நேரத்தில் கோவில் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அங்கு வாகனங்களை நிறுத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தாறுமாறாக ஓடும் ஷேர் ஆட்டோ: கரூர் - கோவை சாலை, திருச்சி சாலை, வெங்கமேடு சாலைகள் குறுகி உள்ளன. காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பது உண்டு. இந்நிலையில், ஷேர் ஆட்டோக்கள் நகரப்பகுதியில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் வேகமாக இயக்கப்படுகிறது. இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதை தவிர்க்க கரூர் நகரில் வேகமாக செல்லும் ஷேர் ஆட்டோக்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேதமான கம்பம்; விபத்து அச்சம்: கரூர், சர்ச் கார்னர் அருகே மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக இந்த மின் கம்பம், சேதமான நிலையில், எந்நேரமும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், மின்வாரிய ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை. சேதமான மின்கம்பம், கீழே விழும்பட்சத்தில், பல வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்க வாய்ப்புள்ளது. எனவே, சேதமான மின் கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.

குவியும் குப்பை; சுகாதார சீர்கேடு: கரூர் - ஈரோடு சாலை, கே.வி.பி., நகரில் கடந்த, சில நாட்களாக அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. இதை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்ய துவங்கியுள்ள நிலையில், துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய் ஏற்படும் முன் குப்பையை நாள்தோறும் அள்ள நடவடிக்கை எடுக்க, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், அதிகளவில் குப்பை சேகரிப்பு தொட்டிகள் வைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.