தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் இல்லை

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: தரம் உயர்த்தப்பட்ட சோமூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, வகுப்பறை கட்டடம் இல்லாததால், மாணவர்களுக்கு திறந்தவெளியில் வகுப்பு எடுக்கப்படுகிறது.
இதுதொடர்பாக, சோமூர் மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூர் அடுத்த, சோமூர் அரசு உயர்நிலைப்பள்ளி, கடந்த, 2015 ஜனவரியில் தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, 83 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்; 10 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். தரம் உயர்த்தப்பட்ட ஆண்டில் இருந்து, வகுப்பறை, ஆய்வுக் கூடம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை. தற்போது, சோமூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வகுப்பறையில், உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. துவக்கப்பள்ளியின் இரண்டு வகுப்பறை கட்டடமும், சேதமடைந்த நிலையில் உள்ளன. பள்ளியின் சுற்றுச்சுவருக்குள் அமைந்துள்ள பள்ளி வளாகத்திலேயே, ஏழு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்ட போதுமான இடவசதி உள்ளது. பழைய கட்டடத்தை இடித்தால், ஒர் ஆய்வுக்கூடம் கட்டப்போதுமான இடமும் உள்ளது. கழிவறை கட்டடம் கட்ட இடவசதியும் உள்ளது. எனவே, உயர்நிலைப் பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை