குடிநீர் பிரச்னையால் வேலை செய்து பிழைக்க முடியல!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் பிரச்னையால் வேலை செய்து பிழைக்க முடியல!

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கரூர்: குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதன் விபரம் வருமாறு: க.பரமத்தி அடுத்த, மேகரை காலனி: கடந்த, இரண்டு மாதமாக குடிநீர் தட்டுப்பாட்டால், மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள நாங்கள், தண்ணீர் எடுக்க செல்வதால், அன்றாட வேலைக்கு செல்ல முடிவதில்லை. இதனால், எங்கள் தொழில் பாதித்து, குடும்பம் நடத்தமுடியவில்லை. முருகன் கோவில் அருகே, புதிய போர்வெல் அமைக்க நீரோட்டம் பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் துவங்கவில்லை. சித்தலவாய் அடுத்த குண்டாங்கல்பட்டி: எங்கள் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த, ஒரு மாதத்திற்கு மேலாக சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால், பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். ஒன்றிய அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தேவர்மலை அடுத்த சீத்தாப்பட்டி: கடந்த, ஆறு மாதமாக சீரான குடிநீர் வினியோகம் இல்லை. பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் கொடுத்தால், அவர்கள் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். போர்வெல் குழாயின் ஆழத்தை அதிகரிப்பதாக கூறியவர்கள், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே, எங்கள் கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குளித்தலை அடுத்த மணச்சனம்பட்டி காலனி: கடந்த, ஐந்து மாதமாக, குடிநீர் பிரச்னைக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். அருகிலுள்ள கிராமங்களில் தண்ணீர் எடுக்கச் சென்றால், எங்களது பிரிவைச் சொல்லி தண்ணீர் எடுக்க அனுமதி மறுகின்றனர். தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், அரவக்குறிச்சி, க.பரமத்தி பகுதிகளைச் சேர்ந்த மக்கள், மனுக்களை அளித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை