மொபட் மீது அரசு பஸ் மோதல்: மின்வாரிய ஊழியர் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபட் மீது அரசு பஸ் மோதல்: மின்வாரிய ஊழியர் படுகாயம்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில், திம்மாச்சிபுரத்தில் மின்வாரிய ஊழியர் படுகாயமடைந்தார். கிருஷ்ணராயபுரம் தாலுகா, லாலாப்பேட்டை அடுத்த, கீழசிந்தலவாடியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு, 48. இவர், மாயனூர் மின்வாரியத்தில் மின் கணக்கீடு அளவீடும் பணியில் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை, 4:50 மணியளவில், பணியை முடித்துவிட்டு, லாலாப்பேட்டையில் இருந்து தன்னுடைய, டி.வி.எஸ்., மொபட்டில், குளித்தலை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது, திம்மாச்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, திருச்சியில் இருந்து கோவை செல்லும் அரசு பஸ், மொபட் மீது மோதியதில் கணேஷ்பாபு படுகாயமடைந்தார். குளித்தலையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை