குடிநீர் கேட்டு சாலை மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் கேட்டு சாலை மறியல்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் நகராட்சி, 47வது வார்டு வஞ்சியம்மன் நகரில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், அப்பகுதியில் கடந்த, ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து, அப்பகுதிமக்கள் நகராட்சி அலுவலகத்தில், புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் நேற்று காலை, 9:30 மணிக்கு, கரூர் - திண்டுக்கல் சாலை, தான்தோன்றிமலையில், காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, பசுபதிபாளையம் போலீசார், மறியலில் ஈடுபட்ட மக்களிடம், 'வரும், மூன்று நாட்களுக்குள் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்ததால், மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை