புகார் பெட்டி - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

எரியாத மின்விளக்கால் பாதிப்பு: சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பேளுக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே, உயர்மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இது, இரண்டு ஆண்டுகளாக எரியாததால், திருட்டு பயம் அதிகரித்து வருகிறது. இது குறித்து, பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை. வாரம் ஒரு முறை கூடும் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உயர் மின் கோபுர மின் விளக்கு எரிவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பெ.கமலக்கண்ணன், பேளுக்குறிச்சி.

சுகாதார வளாகம் அமைக்கப்படுமா? ராசிபுரம் அடுத்த, அத்தனூர், 15வது வார்டு, எம்.ஜி.ஆர்., காலனியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில், தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இரவில், விஷ ஜந்துக்களின் தொந்தரவுக்கு ஆளாகி வருகிறோம். பொது சுகாதார வசதி இல்லாததால் திறந்தவெளியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எங்கள் பகுதிக்கு தெருவிளக்கு, பொது சுகாதார வளாகம் ஏற்படுத்தி தர வேண்டும்.

- வீ.லட்சுமி, அத்தனூர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை