தண்ணீர் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: கொக்கராயன்பேட்டை அருகே, தண்ணீர் லாரியை மக்கள் சிறைபிடித்தனர்.
பள்ளிபாளையம் அடுத்த, கொக்கராயன்பேட்டை அருகே, கோம்புமேடு பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, தண்ணீர் லாரி ஒன்று, சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி, கம்பம் சேதமடைந்தது. ஆத்திரமடைந்த மக்கள் லாரியை சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன், பள்ளிபாளையம் போலீசார் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில், ஆழ்துளை கிணற்றில் இருந்து, தண்ணீர் எடுத்து லாரியில் விற்பனை செய்வதால், நிலத்தடி நீர் பாதித்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நான்கு மாதங்களுக்கு முன், தண்ணீர் விற்பனையை தடை செய்யவேண்டும் என, போராட்டம் செய்தோம். அதிகாரிகளும், 10க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைத்தனர். சில நாட்களில், மீண்டும் தண்ணீர் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. தண்ணீர் லாரி மோதி, மின்கம்பம் சேதமடைந்தது. தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை