குட்டை நிலத்தில் பட்டா: ரத்து செய்ய மக்கள் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குட்டை நிலத்தில் பட்டா: ரத்து செய்ய மக்கள் மனு

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: 'பொய்யான ஆவணங்களை கொண்டு, குட்டை நிலத்தில் பட்டா பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பட்டாவை ரத்து செய்ய வேண்டும்' என, தாளம்பாடி கிராம மக்கள் சார்பில், டி.ஆர்.ஓ.,விடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், தாளம்பாடியில், சேடப்பட்டியில், 7.65 ஏக்கரிலான குட்டை இருந்தது. அப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாகவும், பாசனத்திற்காகவும் பயன்பட்டு வந்தது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சிலர், வருவாய்த் துறையினரை ஏமாற்றி, பொய்யான ஆவணங்களை கொண்டு, தங்கள் பெயரில் பட்டா பெற்று, ஒரு பாகத்தை வேறு நபர்களுக்கு விற்று விட்டனர். அதே நபர்கள், குட்டையில் உள்ள புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமிக்க துவங்கி உள்ளனர். அதனால், அவர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிலத்திற்கு வழங்கிய பட்டாவையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை