குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மனு| Dinamalar

குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மனு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

நாமக்கல்: குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி, பல்வேறு கிராம மக்கள் காலிக் குடங்களுடன், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
* எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், மோளிப்பள்ளி கிராம மக்கள், டி.ஆர்.ஓ., பழனிசாமியிடம் அளித்த மனு விபரம்: ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறோம். நான்கு ஆழ்துளை கிணறுகளும் வறண்டு விட்டன. ஆறு மாதங்களாக தண்ணீர் இல்லாமல், விலை கொடுத்தும், ஐந்து கி.மீ., சென்றும் தண்ணீர் எடுத்து வருகிறோம். மோளிப்பள்ளியில் அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


* திருச்செங்கோடு அடுத்த, சின்னகோட்டப்பாளையம் மக்கள் அளித்த மனு: எங்கள் கிராமத்தில், ஓராண்டுக்கும் மேல் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். மேலும், கட்டப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் ரேஷன்கடை திறக்கப்படவில்லை. அரசு நிலத்தை தனியார் நிறுவனத்தினர் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். சின்ன கோட்டப்பாளையம் அருந்ததியர் காலனிக்கு குடிநீர் வசதி, புதிய ஆழ்துளை கிணறு, ரேஷன்கடை திறப்பு, அரசு நலத்திட்ட உதவிகள், ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், சமுதாயக்கூடம், நூலகம் ஆகியவற்றை அமைத்துக்கொடுக்க வேண்டும்.


* சேந்தமங்கலம் அடுத்த, பொட்டணம்புதூர் அருந்ததியர் தெரு மக்கள் அளித்த மனு: ஊருக்கு சொந்தமான பொதுக்கிணற்றை சிலர் முள்வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால், 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தண்ணீர் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர். குடிநீருக்காக, 10 கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி, பொதுக்கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.